TamilSaaga

இந்திய ஊழியருக்கு அடித்த “ஜாக்பாட்” லாட்டரி – டிரைவராக வேலைப் பார்த்தவருக்கு ரூ.50 கோடி பரிசு! ஒரே இரவில் மாறிய வாழ்க்கை!

அபுதாபியில் பிக் டிக்கெட் (Big Ticket) புத்தாண்டு பம்பர் லாட்டரிகளின் வெற்றி இடங்களை இந்தியர்கள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர்.

இதில், பிக்-டிக்கெட் லாட்டரி வரலாற்றில் மிக உயர்ந்த பரிசான, இந்திய ரூபாயில் 50 கோடிக்கும் அதிகமான தொகையை ஹரிதாசன் என்பவர் வென்று அசத்தியுள்ளார். இவர் இப்போது எமிரேட்ஸில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். கடையில் இருந்து நேரடியாக எடுத்த 232976 என்ற டிக்கெட்டுக்கான பரிசை அவர் வென்றுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் சிம்பிளான வேலை தேடுறீங்களா? 2500 டாலர்கள் வரை சம்பளம்.. 8 மணி நேரம் வேலை – வெளியான புதிய அறிவிப்பு

பிக் டிக்கெட்டின் மிகப் பெரிய ஜாக்பாட்டை வென்ற ஹரிதாசன், மகிழ்ச்சியில் மேற்கொண்டு பேச வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து போய்விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது நம்பமுடியாதது. எனக்கு இன்னும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னால் பேசவே முடியவில்லை. நான் இப்போது சரியான நிலையில் இல்லை. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை” என்று தெரிவித்ததாக கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) குறிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிதாசன், கடந்த 10 ஆண்டுகளாக அபுதாபி மற்றும் அல் ஐன் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

மீதமுள்ள ஐந்து வெற்றியாளர்களும் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கினர்.

இரண்டாவது பரிசான 4 கோடி ரூபாய்க்கு மேல் வென்றவர் அஸ்வின் அரவிந்தாக்ஷன். அவர் டிக்கெட் எண் 390843 மூலம் தொகையை வென்றார். மூன்றாவது பரிசான ரூ.20 லட்சத்தை தீபக் ராமசந்த் பாட்டியா என்பவர் வென்றுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர்.. “சாலையில் தவழ்ந்து சென்ற முதியவர்” – உதவிக்காக வைரலாக்கப்பட்ட Video – அமைச்சர் சண்முகம் பதில்

4வது, 5வது மற்றும் 6வது இடங்களை முறையே தேஜஸ் ஹல்பி, தினேஷ் ஹார்லி, சுனில் குமார் சசிதரன் ஆகியோர் பெற்றனர்.

பிக் டிக்கெட் இணையதளத்தின் வாராந்திர குலுக்கல் மற்றும் சொகுசு வாகனக் குலுக்கல் ஆகியவற்றில் சமீபத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts