சிங்கப்பூரில் இன்று (ஜூலை 16) 43 வயதான ஒருவர் மீது, தன்னை விட மூன்று வயது மூத்தவரான ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த புதன்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 3 மணியளவில் திரு கிம் வீ மிங்கைக் கொலை செய்ததாக ஹெங் பூன் சாய் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிளாக் 326 ஏ, சுமாங் வாக் ஆறாவது மாடியின் நடைபாதையில் அவரைக் குத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை மனநல கண்காணிப்புக்காக ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கையை வழங்கிய நீதிபதி, இந்த வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த நிகழ்ந்ததை அறிந்து தாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, பல காயங்களுடன் பிளாட்டின் வெளியே ஒரு நபர் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டதாகவும் காவல்துறை முன்பு கூறியது நினைவுகூரத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், ஹெங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஒரு பெண் ஒரு வயதானவரை ஆங் மோ கியோவில் கொலைசெய்ததாக குற்றச்சாட்டப்பட்டு தற்போது காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.