TamilSaaga

“சிங்கப்பூரில் மீண்டும் புதிய உச்சத்தில் தொற்று” – ஒரே நாளில் 328 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் மதராசாவில் எட்டு வழக்குகள் கொண்ட ஒரு புதிய கோவிட் -19 கிளஸ்டர் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 7) அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் புதிய உச்சமாக சிங்கப்பூரில் உள்நாட்டில் 328 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 185 வழக்குகள் முந்தய வழக்குகளுடன் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் உருவான மிகப்பெரிய கிளஸ்ட்டராக திகழ்ந்து வந்த ஜூரோங் மீன் துறைமுக கிளஸ்ட்டர் நேற்று தொற்றுகள் ஏதும் பதிவாகாத நிலையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நேற்று பதிவான வழக்குகளில் 91 வழக்குகள் முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கண்காணிப்பு சோதனை மூலம் மேலும் 52 இணைக்கப்பட்ட நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி பதிவில் தெரிவித்துள்ளது. புதிய வழக்குகளில், 70 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள், மேலும் தீவிர நோய் அபாயத்தில் உள்ளனர் என்று MOH தெரிவித்தது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த நால்வருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் சிங்கப்பூருக்கு வந்தவுடன் தொற்று இருப்பது உறுதியானது. மீதமுள்ள இருவர் தங்குமிட அறிவிப்பு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டனர்.

Related posts