TamilSaaga

“சிங்கப்பூரில் எதிர்வரும் 4 வாரங்கள்” : முதியவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் – எச்சரிக்கும் AIC

சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும், அவர்களுடன் வசிப்பவர்களும், பெருந்தொற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காக வீட்டிலேயே இருக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30) ​​ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான ஏஜென்சி (AIC) வெளியிட்ட அறிக்கையில் முதியவர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் இது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் செப்டம்பர் இரண்டாம் பாதியில் பெரும்பாலான நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் புதிய உச்சங்களை பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தொற்று அதிகரிப்போடு இறப்புகளின் விகிதமும் அதிகரித்துள்ளது. நேற்று புதன்கிழமை நிலவரப்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெருந்தொற்றிலிருந்து 38 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இது இதுவரை ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஆகும். இதுவரை இறந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. “ஆகையால் மூத்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கடுமையான உடல்நல சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். மேலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று AIC கூறியுள்ளது.

மே மாதத்தில் இருந்து, தடுப்பூசி போடாத 257 முதியவர்கள் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் AICயின் சமீபத்திய ஆலோசனையின்படி மூத்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு சமூக தொடர்புகளை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts