இந்த பெருந்தொற்றுக்கு முன் கடந்த 2019ம் ஆண்டு நடந்ததற்கு பிறகு சிங்கப்பூரில் Standard Chartered Singapore நடத்தும் மாரத்தான் போட்டிகள் மீண்டும் நடத்தப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. SCS மாரத்தான் எனப்படும் இதுகுறித்து கடந்த நவம்பர் 3ம் தேதி வெளியிட்ட செய்துகுறிப்பில் வரும் டிசம்பர் 1 முதல் 12 வரை நடைபெறும் மெய்நிகர் ரேஸ் (VR) போட்டிகளும் அதே போல டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் மக்கள் நேரடியாக பங்கேற்கும் போட்டிகளும் நடைபெரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொற்றுநோய் காரணமாக SCSM 2020-ல் ஒரு மெய்நிகர் வடிவமைப்பை எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் கூற்றுப்படி, முழு-தடுப்பூசி பெற்றவர்களுக்கு அல்லது போட்டி நேரத்திற்கு செல்லுபடியாகும் நிகழ்வுக்கு முந்தைய சோதனை (PET) முடிவுகளைக் கொண்ட நபர்களுக்கு மட்டுமே நேரில் நடக்கும் கிராண்ட் ஃபைனலேவில் கலந்துகொள்ளப்படும். போட்டியாளர்கள் பங்கேற்பதற்கு மூன்று பிரிவுகள் உள்ளது. 5 கிமீ, 10 கிமீ, மற்றும் டொயோட்டா எகிடன் எனப்படும் நான்கு பேர் கொண்ட குழு ஓட்டம் இதில் அடங்கும்.
பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பங்கேற்பாளர்கள் சுய-நிர்வகித்த ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) செய்ய வேண்டும். பங்கேற்பாளர்கள் நிகழ்வு நடைபெறும் இடத்தில் TraceTogether டோக்கன் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிகழ்வின் போது எல்லா நேரங்களிலும் SMMகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று SCSM தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களில் நேரில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 4,000-ஆகக் குறைக்கப்படும் என்றும், தலா 1,000 பேர் கொண்ட நான்கு அமர்வுகளில் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. SCSM-ன் முந்தைய பதிப்புகளைப் போலன்றி, இந்த ஆண்டு நிகழ்வுக்கு சாலை மூடல்கள் எதுவும் இருக்காது.