சிங்கப்பூர் செயின்ட் ஜான்ஸ் தீவில் இருந்த சுற்றுலா பயணிகள் பலர் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட பெண்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. ரூபி என்ற தமிழர் STOMPபில் பகிர்ந்த அந்த 6 நிமிட காணொளியில் பொதுவெளியில் குழந்தைகள், ஆண்கள் என்று பலர் முன்னிலையில் பல பெண்கள் தங்கள் உடைகளை மாற்றும் காட்சிகளை கண்டு பலரும் அதிர்த்துபோய்வுள்ளனர்.
நல்ல மழை பெய்துகொண்டிருந்த நேரம் என்பதால் ரூபி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஒரு இடத்தில் உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது தான் அந்த பெண்களும் அந்த இடத்திற்கு வந்து அமர்ந்துள்ளனர். இறுதியில் “மழை நின்றவுடன், சட்டென்று எழுந்த அந்த பெண்கள் அங்கேயே தங்கள் ஆடைகளை மாற்றத் தொடங்கியுள்ளனர்.
வெட்டவெளியில் உள்ளாடை முதல் அனைத்து ஆடைகளையும் மாற்றிய பெண்களில் காணொளி – Video Courtesy STOMP
அந்த இடத்தை சுற்றி நிறைய ஆண்களும் குழந்தைகளும் இருப்பதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பது தான் இதில் Highlight. இதில் வேடிக்கை என்னவென்றால் உடைகளை மாற்ற வசதியான கழிப்பறை அந்த இடத்திற்கு மிக அருகிலேயே இருந்தது என்பது தான். “அந்த பெண்கள் இப்படி நடந்துகொண்ட வேளையில் என்னுடன் எனது குழந்தையும் இருந்தது எனக்கு மேலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது” என்று ரூபி தெரிவித்துள்ளார்.
அந்த பெண்கள் ப்ரா உள்ளிட்ட உள்ளாடைகளை கூட அந்த இடத்திலேயே கூச்சமின்றி மாற்றுகினர் என்பதை வீடியோவில் பார்க்கமுடிகிறது. வீடியோவில் பேசும் பெண்ணும் தமிழில் “ப்ராவை கூட இங்கே மாற்றுகின்றனர்” என்று கூறுவதை நம்மால் நன்றாக கேட்க முடிகிறது. ஆண்கள், குழந்தைகள் என்று பலர் குடியிருக்கும் பொதுவெளியில் பல பெண்கள் இவ்வாறு நடந்துகொள்வது நிச்சயம் பலருக்கு முகம் சுளிக்கும் நிகழ்வாகவே இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.