‘வேதாங்கம்’ அல்லது ‘இந்திய ஜோதிடம்’ என்று அழைக்கப்படும் ‘வேத ஜோதிடம்’, மனித வாழ்வில் வானவியல் அம்சங்களின் செல்வாக்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு பண்டைய கால விஞ்ஞானமாகும். இந்த வேத ஜோதிடம் கோள்களின் இயக்கங்களையும் அவற்றின் தன்மைகளையும் பயன்படுத்தி, அவை எவ்வாறு பூமியில், மனித வாழ்வில் தாக்கங்களை உண்டாக்குகிறது என்பதை கணித்துச் சொல்கிறது. எங்களுக்கு இருக்கும் இந்த ஜோதிடத்தின் அடிப்படையில் கணித்துச் சொல்லக் கூடிய ஆற்றல், அறிவு, அனுபவங்களைப், பயன்படுத்தி உங்கள் வாழ்வில் உங்களை முன்னேற்றம் அடைய செய்பவைகளையும், உங்களை முன்னேற விடாமல் தடுப்பவைகளையும் கண்டறிந்து எடுத்துச் சொல்லி உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியும்.
அடுத்து என்ன செய்வது என்றே தெரியாத ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டு நீங்கள் மூச்சுமுட்டி நிற்கும்போது, அந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்கி ஜோதிடத்தால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு எப்போது நடக்கும்? அது நடக்குமா ? நடக்காதா ? என்பதையும் ஜோதிடர்களால் கணித்து சொல்ல முடியும்.
வேதங்களின் கூறுகள் வேதங்களின் கண்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காண உதவுகின்றன .அந்த கண்களின் வழியாகப் பார்க்கும் ஒரு ஜோதிடரும், (ஒரு தனிமனிதரின்) உங்களின் பலம் மற்றும், பலவீனங்களையும், எதிர்கால சாத்தியக் கூறுகளையும் கணித்துச் சொல்லி, உங்களுக்கு நம்பிக்கை கரம் கொடுத்து எழுப்பி விட முடியும் .
நாங்கள் செய்து வருவதும் அதுதான்…!!!
இணைய வழியாக, சோதிடம், ராசி பலன்களை துல்லியமாக கணித்துச் சொல்லி , பல்வேறு மனிதர்களின் வாழ்வுத் தரத்தை உயர்த்தியதோடு அல்லாமல் அவர்களை வாழ்வில் வெற்றியடைந்த மனிதர்களாகவும் மாற்றிக் கொண்டு இருக்கும் தொன்மையான வரலாறும், சிறப்பான பெயரும் எங்களுக்கு உண்டு !
இந்த சிறப்பான எங்களது சோதிட சேவையின் ஊற்றுக்கண் – புகழ்பெற்ற வேத ஜோதிட வல்லுனர் ஐயா பி.எஸ் சுப்பிரமணிய ஐயர். அன்னாரது எண்ணத்தில் உதித்து , அவரது சேவையில் வளர்ந்து , இன்றைக்கு விழுது பரப்பி நிற்கும் எங்களது இந்த சோதிட சேவை மையத்தைப் பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
1945 – ஜப்பானியப் பேரரசின் கையில் இருந்து சிங்கப்பூர் ஆட்சி அதிகாரம் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் வந்து சேர, அடுத்து என்ன என்ற கேள்வியோடு, பல்வேறு விதமான இடர்கள் இன்னல்களை சந்தித்து வந்த சிங்கப்பூர் மக்களுக்கு உதவுவதற்காக, ஆலமர விதையாக தனது இருபதாவது வயதில் ஐயா பி.எஸ் சுப்பிரமணிய ஐயர் அவர்களினால் தொடங்கப்பட்ட பயணம் இது.!
வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகளோடும், பெருமூச்சுகளோடும், தனது கோவிலுக்கு வந்த அன்பர்களுக்கு ஆறுதலுக்காக ஆன்மீக வழிகளை கற்றுக்கொடுத்ததில் தொடர்ந்த சேவை இது. தனது எளிய முயற்சியால் பல்வேறு மக்கள் பலன் பெறுவதை கண்ட பிறகு, அவர்களுக்கு மேலும் அதிகம் உதவ வேண்டும் எனும் தாகம் மேலிட, தனது கோயிலை நாடிவரும் சகோதரர்களுக்கு வழிகாட்டுதலையும் , உடனிருப்பையும், நம்பிக்கை முன்னேற்றத்திற்கான எதிர்நோக்கினையும் வளர்த்திட ஒரு சேவை மையம் அமைக்க முடிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து தனது 35 ஆவது வயதிலேயே அவரது சோதிட சேவைகளையும் தொடங்கிவிட்டார்.
ஆலய குருவாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு 1970 முதல் முழுநேர சோதிட சேவையாளராக தம் பணியைத் தொடர்ந்திட விரும்பி ஸ்ரீகிருஷ்ணா சோதிட சேவை மையத்தை நிறுவினார். இவ்வாறு பல்வேறு மக்கள் ஐயா சுப்பிரமணிய ஐயர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளின் வழியாக தங்கள் பிரச்சினைகளுக்கு மிகச் சரியான, துல்லியமான தீர்வுகளைக் கண்டனர்.
அன்று முதல் இன்று வரை ஸ்ரீகிருஷ்ணா சோதிட சேவை மையம் , துல்லியமான ஜோதிட கணிப்புகளுக்கும், தீர்வுகளுக்கும், புகழ்பெற்ற நம்பிக்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஐயா சுப்பிரமணிய ஐயர், அவர்கள் இன்று வரை தனது முழு உள்ள,ஆன்ம அர்ப்பணிப்போடு இந்த தெய்வீக சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஸ்ரீகிருஷ்ணா சோதிட சேவை மையம் மக்களின் மனதில் மிக உயரிய நம்பிக்கைக்குரிய இடத்தில் இருப்பதற்கும், எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் இடமாக இந்த சோதனை நிலையத்தை அணுகி வருவதற்கும் ஐயா அவர்களின் அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணமாக அமைந்துள்ளது .
இந்த நாள் வரை எங்களது இந்த ஸ்ரீ கிருஷ்ணா சோதிட சேவை மையம் தான் சிங்கப்பூரின் பழமைவாய்ந்த சோதிடம் என்பதையும், ஐயா அவர்களால் தீர்வு சொல்ல முடியாத பிரச்சனைகளே ஏறக்குறைய இல்லை என்பதையும், கல்வி, திருமணம், தொழில் போன்றவற்றை துல்லியமாக கணித்து சொல்வதில் ஐயா சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தான் சிங்கப்பூரின் முன்னோடி என்பதையும் பெருமையோடு கூறிக் கொள்வதில் பெரு மகிழ்வடைகிறோம்.
ஒரு சோதிட வல்லுனராக மக்கள் ஐயா அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே, அவரை சிறந்த, மிகத்துல்லியமான கணிப்பாளராக மாற்றியிருக்கிறது. இவ்வளவு செறிந்த பின்புலத்தோடு, உங்களுக்கும் நாடிவரும் எல்லாருக்கும், உதவி செய்ய எப்போதும் காத்து இருக்கிறோம் நாங்கள். குறிப்பாக திருமணம் திருமண வாழ்வு சார்ந்த உங்களின் எல்லா கேள்விகள், பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல எங்களால் முடியும்.!
திருமணம் எப்போது நடக்கும் ?
ஏன் தள்ளிபோகிறது ?
இவரை திருமணம் செய்து கொண்டால், இவர் எனக்கு சரியான துணையாக இருப்பாரா?
இருவருக்கும் மன பொருத்தம் எப்படி இருக்கிறது !?
போன்ற திருமணத்துக்கு முந்தைய குழப்பங்களுக்கும்.!
முறிந்து கொண்டிருக்கும் எங்கள் திருமண உறவை எப்படி சரிசெய்வது ?
எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட என்ன காரணம் ?
குழந்தைகள் பற்றிய கேள்விகள்?
போன்ற திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சனைகளுக்கும், சரியான பதில்களும், தீர்வுகளும் எங்கள் ஸ்ரீ கிருஷ்ணா சோதிட சேவை மையத்தில் வழங்கப்படுகிறது.
இவை மட்டுமின்றி
குல முன்னோர்கள் கும்பிட்ட, நாமும் நம் குலமும் கும்பிட வேண்டிய குலதெய்வம் எதுவென அறியாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் குலதெய்வம் என்று கண்டுபிடித்து சொல்வது. வீட்டுமனை வாங்குவது எப்போது? எங்கே? என்ற கணிப்புகள், வீடு கட்டுவதற்கான தகுந்த காலங்கள், தடைகள், கட்டும் வீட்டிற்காக சரியான வாஸ்து பலன்கள் பார்த்து சொல்வது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் பிறப்பு சுகப்பிரசவமா அறுவை சிகிச்சையா? என அறிந்து சொல்வது, குழந்தை பிறக்கப் போகும் நாள் நட்சத்திரங்களை முன்கூட்டியே கணிப்பது.
என வயிற்றில் இருக்கும் சிசு தொடங்கி ஒரு முழு மனித வாழ்வு முழுவதற்குமான எல்லா தேடல்களுக்கும்,கேள்விகளுக்கும் விடைகாண உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடியும். விடை கண்டு பிடித்தபின் அதில் தடைகள் இருப்பதாக அறிய வந்தால் ! அந்தத் தடைகள் நீங்கவும் மிகச் சிறந்த வல்லுநர்கள்களால் எமது ஸ்ரீ கிருஷ்ணா சோதிட சேவை மையத்தில் தீர்வுகள் வழங்கப்படுகிறது..
உங்கள் வாழ்வில் உங்களை உறுத்திக்கொண்டே இருக்கும் அல்லது உறங்க விடாமல் செய்யும் பிரச்சினையை,ஒரு கேள்வியை சரியான முறையில் சரி செய்ய விரும்புகிறீர்களா!?
ஒருமுறை வாருங்கள் எங்களது
ஸ்ரீ கிருஷ்ணா சோதிட சேவை மையத்திற்கு.!