TamilSaaga

சிங்கப்பூர் – Sydney : வரும் டிசம்பர் முதல் மீண்டும் Airbus A380 விமானங்கள் இயக்கம் – மீண்டு வரும் SIA

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தனது முதன்மை ஏர்பஸ் A 380-ஐ வரும் டிசம்பர் 1, 2021 முதல் சிட்னிக்கு மீண்டும் செயல்படுத்தவிருப்பதாக ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒரு புதிய பயண ஏற்பாடு “அடுத்த வாரம் அல்லது அதற்குள்” நிறுவப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்த பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SIA-ன் A380-களில் ஆறு அறைகள், 78 வணிக வகுப்பு இருக்கைகள், 44 பிரீமியம் பொருளாதார வகுப்பு இருக்கை மற்றும் 343 பொருளாதார வகுப்பு இருக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. A380 சிங்கப்பூரில் இருந்து சிட்னிக்கு தினமும் இயக்கப்படும். SQ231 என்ற அந்த விமானம் நமது உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12:45 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி காலை 11:50 மணிக்கு சிட்னி சென்றடையும். மேலும் அங்கிருந்து புறப்படும் விமானம் SQ222, சிட்னியில் இருந்து மாலை 4:10 மணிக்குப் புறப்பட்டு, சாங்கி விமான நிலையத்தை இரவு 9:20 மணிக்கு வந்தடையும்.

SQ231 மற்றும் SQ222 க்கான A380 இன் அட்டவணை வெள்ளிக்கிழமை (அக். 22) மதியத்திலிருந்து (ஆஸ்திரேலிய கிழக்கு பகல் நேரம்) கணினியில் ஏற்றப்படும், விரைவில் டிக்கெட்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று SIA தெரிவித்துள்ளது. SIA பிராந்திய துணைத் தலைவர் லூயிஸ் அருள், A380 சிட்னிக்கு திரும்பியது ஆஸ்திரேலிய சந்தையில் விமான நிறுவனத்தின் “மாறாத அர்ப்பணிப்பை” அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று புகழாரம் சூட்டினார். சுமார் 67,000 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு SIA ஏறக்குறைய 4,000 பயணிகள் விமானங்களை இயக்கியுள்ளது.

அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் தடுப்பூசிகளை வழங்க அனுமதிக்கும் முக்கிய வர்த்தக சேனல்களைத் திறந்து வைப்பதற்காக SIA 3,000 சரக்கு விமானங்களை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts