TamilSaaga

“சிங்கப்பூரில் கட்டண செயலாக்க நிறுவனம்” – 6,53,000 மோசடி விவகாரத்தில் சந்தேக அடிப்படையில் மூவர் கைது

சிங்கப்பூரில் 6,53,000 வெள்ளிக்கும் அதிகமான கட்டண செயலாக்க நிறுவனத்தை மோசடி செய்து சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து SPFன் வணிக விவகாரத் துறை அதிகாரிகள் 27 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களை இந்த விவகாரம் குறித்து அடையாளம் கண்டனர். அவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு நபர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் நிறுவன வங்கிக் கணக்குகளை மூன்றாம் நபரான 29 வயதான ஒருவரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையில் 10க்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளை நடத்த இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த இருவரும் தங்கள் வங்கிக் கணக்குகளை ஒப்படைப்பதன் மூலம் 9,000 வெள்ளிக்கும் அதிகமான கமிஷன் அல்லது வெகுமதிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது, என்று SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் SPF, அந்த கட்டண செயலாக்க நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேருக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, மேலும் அவர்கள் மீது குற்றவியல் விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

Related posts