TamilSaaga

கழிவுநீர் மூலம் பரவும் தொற்று – 400 இடங்களில் கண்காணிப்பு குழு அமைக்க திட்டம்

சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற அமைப்பு கழிவுநீர் மூலம் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் சுமார் 400க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

இது கழிவுநீர் மூலம் தொற்று பரவுதலையும் மற்ற வகையான பாதிப்புகளையும் தடுக்க பயனுள்ளதாக அமையும்.

சமீபத்தில் புக்கிட் மேரா வியூ, ஹவ்காங் போன்ற பகுதிகளில் உள்ள கழிவுநீர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியபட்டது. அதன்பிறகு அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

ஒரு வேலை கழிவுநீர் சோதனையில் கிருமி கண்டறியப்படவில்லை என்றாலும் கூட அந்த பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

அயல்நாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், நர்சிங் ஹோம்கள் போன்ற இடங்களிலும் இந்த கழிவுநீர் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Related posts