TamilSaaga

சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்டம்.. அபராதத்தை அதிகரிக்க முடிவு – உள்துறை அமைச்சகம்

சிங்கப்பூரில் உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சிங்கப்பூரில் சூதாட்ட சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக அளவில் பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடப்படும் சூதாட்டம், மேலும் இணைய வழியில் நடக்கின்ற விளையாட்டுக்கள். கூடுதலாக Claw Machine எனும் விளையாட்டு இயந்திரங்கள் ஆகியவற்றின் தொடர்பில் சட்ட திருத்தங்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நாடாகும் சூதாட்ட சேவைகளுக்கு துணைபுரியும் அல்லது அவற்றை நடத்தும் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வோருக்கான அபராதங்களை அதிகரிக்கவும் அமைச்சகம் பரிந்துரை வைத்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்படும் பொருட்களை உள்ளடக்கி பட்சத்தில் சூதாட்டம் என்பதன் விளக்கத்தை மாற்றவும் அமைச்சகம் முன்மொழிந்து உள்ளது. சிங்கப்பூரில் உருமாறிக்கொண்டு வரும் சூதாட்ட பொருள்கள் வர்த்தக மாதிரிகள் ஆகியவற்றின் இடையே சிங்கப்பூரின் சட்டங்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதை உறுதிசெய்ய இவ்வாண்டு பிற்பகுதியில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது.

Related posts