TamilSaaga

தேக்காவில் ஹோட்டல் வைத்துள்ள தமிழர் – வரிசையில் நின்று உணவு வாங்கும் சிங்கப்பூர் போலீஸார்

சமீபத்தில், Tamil Saaga தளத்தில் சிங்கப்பூர் போலீசாரின் சிறப்புகள் குறித்த செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், சிங்கப்பூர் காவல் துறையினரின் நல்ல பண்புகள், கட்டுப்பாடுகள், கடைப்பிடிக்கும் நன்னெறிகளை போன்றவற்றை குறிப்பிட்டிருந்தோம்.

உலகின் வேறு எந்த காவல்துறையினரிடமும் இல்லாத ஒரு ஒழுக்கம் சிங்கப்பூர் போலீசாரிடம் இருக்கிறது என்பதே உண்மை. அதேயே நாம் செய்தியாக பிரதிபலித்திருந்தோம்.

இந்நிலையில், நமது முகநூல் பக்கத்தில் தமிழ் சாகா வாசகர் மணிகண்டன் அவர்கள் சிங்கப்பூர் போலீசார் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் தேக்காவில் உணவுக்கடை வைத்துள்ளேன். அங்கு வரும் காவல்துறை அதிகாரிகள் வரிசையில் நின்றுதான் உணவு வாங்குவார்கள். கையில் பணத்தை கொடுத்துவிட்டுத்தான் உணவை வாங்குவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம், சிங்கப்பூர் போலீசாரின் நற்பண்புகளை.

அதுமட்டுமின்றி, நமது வாசகர் ஹமீத் கூறுகையில், “சிங்கப்பூர் போலீசார் சிறந்த ஆளுமை கொண்டவர்கள்” என்று கூறியுள்ளார். அதுபோல், மணி சக்தி என்ற வாசகர், “சிங்கப்பூர் போலீசார் மரியாதைக்குரியவர்கள்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts