TamilSaaga

அன்று குடும்பத்திற்காக சிங்கப்பூரில் வேலைக்குச் சென்ற மீனாட்சி.. வெளியே சொல்ல முடியாத மோசமான அனுபவம் – இன்று “யூடியூப் சேனல்” மூலம் லட்சங்களில் கொட்டும் வருமானம்

சிங்கப்பூர் மட்டுமல்ல ஒரு பெண் தனியாக எந்த நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் ஆரம்ப கட்டத்தில் சில தடைகளை தாண்டித்தான் செல்ல வேண்டியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. மீனாட்சியின் வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.

மீனாட்சி தமிழகத்தில் பிறந்து இன்று “அம்மா வீட்டு சமையல்” என்ற youtube சேனல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். 3,40,000 அதிகமான நபர்கள் இவருடைய சேனலை பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனம் வழங்கிய சிறந்த குடும்பத் தலைவி என்ற விருதினையும் பெற்றுள்ள மீனாட்சி சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து, கசப்பான அனுபத்துடன் திரும்பிய ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் சிங்கப்பூர் வந்து அனுபவித்த கஷ்டத்தை பற்றி கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் சிங்கப்பூர் மிகசிறந்த நாடு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் மீனாட்சி போன்ற வெகு சிலருக்கு அந்த அனுபவம் கசப்பான ஒன்றாக மாறி விடுகின்றது.

லட்சத்தில் பணம் செலுத்தி சிங்கப்பூர் வந்த பிறகு… சொன்ன வேலையை தராமல் உங்கள் Company உங்களை எடுபுடி வேலை பார்க்கச் சொன்னால் என்ன செய்வது? – Detailed Report

சிங்கப்பூர் வாழ்கை பற்றி மீனாட்சி கூறுகையில், “சரியாக இரண்டு மாதம் தான் நான் சிங்கப்பூரில் வேலை செய்தேன், ஆனால் திரும்ப சென்னை வரும்போது சம்பளம் கூட வாங்காமல் தான் திரும்பினேன். சிங்கப்பூர் செல்ல அனைத்து செலவுகளும் நானே செய்தது தான், தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று நம்பியே சிங்கப்பூர் சென்றேன். உண்மையில் சிங்கப்பூர் அதை நம்பி வரும் தொழிலாளர்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும் நாடு.

நான் சிங்கப்பூர் வந்ததும் எனது வேலை சம்மந்தமாக 3 நாட்கள் பயிற்சி அளித்தார்கள், நான் எப்படி வேலை செய்யும் இடத்தில் நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சனை ஏற்பட்டால் யாரை அணுகவேண்டும் என்பது அனைத்தையும் எனக்கு கூறினார்கள். இறுதியில் நான் வேலை செய்யவேண்டிய வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். அந்த வீட்டில் இருந்த இருவரும் என்னைவிட வயதில் சிறியவர்கள் தான்.

என்னை பொறுத்தவரை நான் எங்கு சென்றாலும் நல்ல மனத்தோடு பழகும் குணம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களோ என்னை “வேறு விதமாக” நடத்த துவங்கினர். அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அது எனக்கு பிடிக்காமல் நான் ஊருக்கு திரும்புகிறேன் என்று கூறியும் அவர்கள் என்னை விடவில்லை. இறுதியில் என் மகன் தான் டிக்கெட் எல்லாம் புக் செய்து என்னை மீண்டும் தாயகம் கொண்டுவர ஏற்பாடு செய்தான். நானும் சும்மாயில்லை.. அவர்களை கொஞ்சம் கதறவிட்டுத்தான் மீண்டும் சென்னை வந்தேன்”. (சிரிக்கிறார்)

சிங்கப்பூர்.. 34 சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த இளைஞன் : “ஓங்கியது நீதிபதி கமலாவின் நீதிக்கரங்கள்” – உபசரிக்க காத்திருக்கும் சிங்கை போலீஸ்

“மொழி தெரியாததால் சாங்கி விமான நிலையம் செல்லுக்கூட மிகவும் சிரமப்பட்டேன், மாலை தான் என் விமானம் என்றாலும் காலையிலேயே ஏர்போர்ட் சென்று அமர்ந்திருந்தேன். இறுதியாக சென்னை வந்திறங்கிய பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. நமக்கு வேண்டுமானால் நமது சொந்தங்கள் வெளிநாட்டில் வேலை செய்வது சந்தோசம் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் அடித்தட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் வேலை செய்கின்றனர் என்றார்.

சிங்கப்பூரில் கிடைத்த கசப்பான அனுபவங்களால், சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்த மீனாட்சி, இன்று “அம்மா வீட்டு சமையல்” என்ற youtube சேனல் மூலம் சிங்கப்பூரில் வாங்கிய சம்பளத்தை விட பல பல மடங்கு அதிகம் சம்பாதித்து வருகிறார்.

மீனாட்சியின் வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts