TamilSaaga

தமிழக ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் ஏஜென்சிகள் கவனத்திற்கு… சிங்கப்பூரின் இந்த நிறுவனத்துக்கு 3 மாதம் தடை – நம்பி பணம் வாங்கிடாதீங்க!

SINGAPORE: சிங்கப்பூரில் பணிபுரிய தமிழக ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் ஏஜென்சிகளுக்கான மிக முக்கிய செய்தி இது.

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலும் ஏஜென்சிகள் மூலமே சாத்தியமாகிறது. உயர் மட்ட அளவிலான வேலைகளுக்கு இந்தியாவில் இருக்கும் கம்பெனிகள் மூலமாகவே அவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், மற்ற வேலைகளுக்கு ஏஜென்சிகள் மூலமே செல்ல வேண்டியுள்ளது.

பல ஏஜென்சிகள் அதிக பணம் வாங்கி ஆட்களை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதில், ஏகப்பட்ட ஏமாற்று பேர்வழிகளுக்கு உண்டு. மிகச் சில ஏஜென்சிகள் மட்டுமே, தங்களுடைய லாபமும் முக்கியம், வேலைக்கு செல்லும் நபரின் வாழ்க்கையும் முக்கியத்துவம் என்ற கோட்பாட்டில் சேவை செய்கின்றன.

இந்நிலையில், சிங்கையின் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தற்போது புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், ஏஜென்சிகளுக்கு போய் சேர வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தி வெளியிடப்படுகிறது.

சிங்கப்பூரின் LE FONG BUILDING SERVICES PTE. LTD. பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. 50, SERANGOON NORTH AVENUE-ல் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. Waterproofing Contractor-ஆக இந்த நிறுவனமும் தனது சேவையை செய்து வருகிறது.

திறமையான & நம்பகமான Waterproofing Contractors
பெரிய அளவிலான அல்லது சிறிய அளவிலான அனைத்து Waterproofing வேலைகளிலும் தரமான வேலைப்பாடு
Waterproofing தொழில் துறையில் 10+ வருட அனுபவம்
இலவச Waterproofing ஆய்வுகள் மற்றும் சரிசெய்தல்
விலையை சமரசம் செய்யும் தரமான வேலை

ஆகிய இந்த 5 அம்சங்கள், இந்த நிறுவனத்தின் மிக முக்கிய அளவுகோலாக பார்க்கப்படுகிறது. மக்களிடையே இந்த 5 விஷயங்களை முன்வைத்தே இந்நிறுவனமும் வியாபாரம் செய்து வருகிறது.

மேலும் படிக்க – நொடியில் உடைந்த skylight panel… 8 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த ஊழியர் – சிங்கப்பூர் நிறுவனத்தின் MD-யை அழைத்து “லெஃப்ட் – ரைட்” வாங்கிய அரசு – அனைத்து பணிகளும் நிறுத்தம்!

இந்நிலையில் தான் கடந்த செப்.1ம் தேதி, இந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கிருந்த skylight panel-ல் நின்று அதாவது (சூரிய ஒளி தடுக்கும் panel) மேல் ஏறி நின்று, Waterproofing பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த skylight panel திடீரென உடைய, எந்தவித பிடிமானமும் இன்றி நின்றுக் கொண்டிருந்த அந்த ஊழியர், அப்படியே 8 மீட்டர் உயரத்தில் இருந்து மேற்கூரை வழியாக கீழே விழுந்தார். இதில், அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த ஊழியருக்கு, இன்னமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, Le Fong’s நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் லாம் என்பவரை அழைத்த மனித வளத்துறை அமைச்சகம், செப். 1 அன்று நிகழ்ந்த கடுமையான பணியிட விபத்து மற்றும் பணியிடத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க கோரியது.

இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பணியிடத்தை ஆய்வு செய்த MOM, அங்கு ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பற்ற பணி நடைமுறைகளை அங்கு கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு அடுத்த 3 மாதத்துக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்கள் எவரையும் வேலைக்கு எடுக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்துடன் தமிழக ஏஜென்சிகள் ஒப்பந்தம் செய்திருந்தால், அடுத்த 3 மாதத்துக்கு எந்த ஊழியரையும் நீங்கள் சிங்கப்பூர் அனுப்ப முடியாது என்பது நினைவில் கொள்ளுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts