TamilSaaga

தென்னாப்பிரிக்க தமிழ் மக்களை.. தவிக்கவிட்டுச் சென்ற சுவாமிநாதன் கருப்ப கவுண்டன்! – யார் இவர்?

இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், நம் நாட்டின் விடுதலைக்காக போராடியது போலவே பிற நாடுகளின் விடுதலைக்காகவும் போராடியதில் தமிழர்களின் பங்கு என்பது மிகவும் அதிகம். அதுபோலவே தென்னாப்பிரிக்க நாட்டினுடைய விடுதலைக்காக போராடிய மூத்த தமிழ் போராளியும் தென்னாபிரிக்க மக்கள் “சுவாமி” என்று அன்போடு அழைத்த சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் தனது 94வது வயதில் இயற்கையை எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள் : டிசம்பர் 2 முதல் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்

கடந்த 1944ம் ஆண்டு பொது வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்த சுவாமிநாதன், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து 1950ம் ஆண்டு முதல் அந்நாட்டின் விடுதலைக்காக அயராது போராடி வந்தார். சிறந்த சமூகப் போராளி, அதிலும் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர், தொழிற்சங்க செயல்பாட்டாளர் என்று பல முகங்கள் இவருக்கு உண்டு என்று அரசியல் தலைவர்கள் இவருக்கு புகழாரம் சூட்டிவருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடந்த அத்தனை போராட்டங்களிலும் சுவாமிநாதன் தன்னுடைய பங்கினை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு விடுதலை பெற்ற பிறகும் நாட்டு மக்களுடைய வாழ்க்கை தரம் உயரும் வண்ணத்தில் பல்வேறு சமூக அமைப்புகளில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு இறுதிவரை மக்களுக்காக உழைத்தார் சுவாமிநாதன். காந்திய வழியில் போராளியாக திகழ்ந்த சுவாமிநாதனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts