TamilSaaga

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை – வெளிச்சத்திற்கு வந்த பொய் தகவல்

தென்னாப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண் கின்னஸ் சாதனை படைத்தார் என்று அண்மையில் வெளியான செய்தி போலி என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பிரசவித்ததாக வெளியான தகவல் ஆதாரமற்றது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Gauteng என்ற அந்த மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகள் பிறந்ததாக பதிவுகளில் இல்லை என்று அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் கர்ப்பமாகவே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரபல பிபிசி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 37 வயது மதிக்கத்தக்க Gosiame Thamara Sithole என்ற அந்த பெண் தற்போது மனநல சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் =பிபிசி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்று முதலில் செய்தி வெளியிட்டது Pretoria என்ற செய்தி நிறுவனம். ஆனால் அந்த தகவலை அந்த பெண்ணினுடைய கணவர் தான் தெரிவித்தார் என்று தற்போது கூறியுள்ளது.

இதனிடையே இந்த செய்தி வெளியான பிறகு அந்த தம்பதியருக்கு நன்கொடைகள் பல குவிந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts