TamilSaaga

சிங்கப்பூர்.. “காரில் இருந்து விழுந்த மாணவன்” : காரை விட்டு இறங்காத ஓட்டுநர் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், வைரல் Video

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Beh Chia Lor என்ற முகநூல் பக்கத்தால் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், பள்ளி மாணவர் ஒருவர் காரில் இருந்து கீழ் விழும் காட்சிகள் பதிவாகி வைரலாகி வருகின்றது. நல்வாய்ப்பாக பின்னால் எந்தவிதமான வாகனங்களும் வராத நிலையில் அந்த சிறுவன் பெரிய அளவினை காயங்கள் இன்றி தப்பியுள்ளான்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் தொற்றுக்கு 92 வயது மூதாட்டி பலி” : பதிவானது Omicron தொடர்பான முதல் மரணம் – எச்சரிக்கும் MOH

வெளியான அந்த காணொளியில் ஒரு ஃபோக்ஸ்வேகன் காரில் பள்ளிக்கு வந்த அந்த சிறுவன் காரை விட்டு இறங்க கதவை திறக்கிறான். ஆனால் அவன் கீழிறங்க கால்களை தரையில் பதிப்பதற்குள் அந்த காரை ஓட்டுநர் முன்னோக்கி செலுத்த அவன் நிலைதடுமாறி கீழே விழுகிறான்.

ஓரிரு வினாடிகள் தரையில் கிடந்த அந்த சிறுவன், மீண்டும் சுதாரித்து எழுந்து பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு நிற்பது அந்த காணொளியில் தெரிகின்றது. உடனைடியாக அந்த பள்ளியில் இருந்த ஒரு போக்குவரத்து மார்ஷல் சிறுவனை அணுகி, சிறுவனுடனும் ஓட்டுநருடனும் சில வார்த்தைகளைப் பரிமாறுவதை பார்க்கமுடிந்தது. இதையடுத்து, அந்த சிறுவன் பள்ளிக்குள் சென்றபிறகு பள்ளியின் மார்ஷல் அந்த வாகனத்தின் கதவை மூடினார். ஆனால் இவ்வளவு நடந்தபோது அந்த ஓட்டுநர் காரில் இருந்து இறங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வங்கி கணக்கு மோசடி” : சேமிப்புகளை இழக்கும் அப்பாவி மக்கள் – களமிறங்கும் சிங்கப்பூரின் SNDGG

நெட்டிசன்கள் அந்த டிரைவர் பொறுமையற்றவராக இருக்கின்றார் என்று பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர் காருக்குள் அவனுடைய பெற்றோர் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் ஏன் இறங்கி பிள்ளைக்கு என்ன ஆனது என்றுகூட கவனிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts