TamilSaaga

சிங்கப்பூரில் வேலை இழந்தாலும் கவலை வேண்டாம்.. சிங்கப்பூர் அரசின் இந்தத் திட்டம் உங்களுக்குத்தான்!

சிங்கப்பூரின் பொருளாதாரம் உலகளவில் முன்னணியில் இருந்தாலும், வேலை இழப்பு என்பது எந்த நாட்டிலும் எதிர்பாராத சவாலாக இருக்கும். குறிப்பாக எதிர்பாராமல் வேலையை இழந்தவர்களுக்கு பொருளாதார மற்றும் மனம் ரீதியான தாக்கங்கள் பெரியதாக இருக்கும். இதை உணர்ந்து, சிங்கப்பூர் அரசு 2025 ஏப்ரல் முதல் SkillsFuture Jobseeker Support Scheme என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், வேலை இழந்தவர்களுக்கு தற்காலிக நிதி உதவி வழங்குவதோடு, அவர்களை மீண்டும் வேலைவாய்ப்பிற்கு தயார் செய்ய உதவுகிறது.

சிங்கப்பூரில் எதிர்பாராத வேலை இழப்பு, குறிப்பாக பணிநீக்கம், தொழிலை நிறுத்துதல், நோய்/காயம்/விபத்து காரணமாக பலருக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு, 14,590 ஊழியர்கள் வேலை இழந்ததாகவும், இதில் 11,030 பேர் PMETs (Professionals, Managers, Executives, and Technicians) என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட இரு மடங்கு அதிகம். Lazada, Amazon, Shopback, Ninja Van, Citi போன்ற பெரிய நிறுவனங்களில் ஏற்பட்ட வேலை இழப்புகள் இதை மேலும் வெளிப்படுத்துகின்றன.

இதற்கு முன்பு, சிங்கப்பூர் அரசு வேலையின்மை காப்பீடு (unemployment insurance) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தயக்கம் காட்டியது. காரணம், சில நாடுகளில் இத்தகைய திட்டங்கள் வேலையின்மையை ஊக்குவிப்பதாக அமைந்ததை அரசு கவனித்தது. ஆனால், பொருளாதார மாற்றங்கள் மற்றும் வேலை இழப்பு அதிகரிப்பு காரணமாக, இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை முதன்முதலில் பிரதமர் லாரன்ஸ் வோங் 2024 ஆகஸ்ட் மாத தேசிய தின உரையில் அறிவித்தார்.

SkillsFuture Jobseeker Support Scheme: இது எப்படி வேலை செய்கிறது?

இந்தத் திட்டம், எதிர்பாராமல் வேலை இழந்த குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெற்றவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு அதிகபட்சம் S$6,000 வரை நிதி உதவி வழங்குகிறது. இதன் முக்கிய நோக்கம், வேலை இழந்தவர்கள் உடனடி பொருளாதார அழுத்தம் இல்லாமல், தங்களுக்கு ஏற்ற புதிய வேலைவாய்ப்பைத் தேடவும், தேவையான பயிற்சிகளைப் பெறவும் உதவுவது.

சிங்கப்பூரில் வேலை தேடுகிறீர்களா? உங்கள் கனவு வேலை அமேசானில் உங்களுக்காக காத்திருக்கிறது!

தகுதி:

  • குடியுரிமை: 2025 ஏப்ரல் முதல் சிங்கப்பூர் குடிமக்கள் (singaporeans) (21 வயது மற்றும் அதற்கு மேல்) தகுதி பெறுவர். 2026 முதல் காலாண்டில் நிரந்தர குடியிருப்பாளர்களும் (Permanent Residents) தகுதி பெறுவர்.
  • வருமான வரம்பு: கடந்த 12 மாதங்களில் சராசரி மாத வருமானம் S$5,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும் (முதலாளியின் CPF பங்களிப்பு தவிர).
  • வேலை அனுபவம்: கடந்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிங்கப்பூரில் வேலை செய்திருக்க வேண்டும்.
  • வேலை இழப்பு காரணம்: வேலை இழப்பு எதிர்பாராத காரணங்களால் (retrenchment, cessation of business, dismissal, illness/injury/accident) இருக்க வேண்டும்.

சொத்து மதிப்பு: வசிக்கும் சொத்தின் ஆண்டு மதிப்பு (Annual Value) S$31,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். இது அனைத்து HDB குடியிருப்புகளையும், சில குறைந்த மதிப்பு தனியார் சொத்துகளையும் உள்ளடக்கும்.

மற்றவை: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் பண உதவி பெற்றிருக்கக் கூடாது.

நிதி உதவி:

இந்தத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படும், ஆனால் இது குறையும் வகையில் (tiered payouts) வடிவமைக்கப்பட்டுள்ளது:

  • முதல் மாதம்: அதிகபட்சம் S$1,500
  • இரண்டாவது மாதம்: S$1,250
  • மூன்றாவது மாதம்: S$1,000
  • மீதமுள்ள மூன்று மாதங்கள்: மாதம் S$750.

இந்தப் பணம், உங்கள் முந்தைய மாத ஊதியத்தைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, உங்கள் முந்தைய ஊதியம் மாதம் S$1,200 ஆக இருந்தால், முதல் மாதத்தில் S$1,200 மட்டுமே பெறுவீர்கள், அதற்கு மேல் இல்லை. மேலும், நீங்கள் புதிய வேலை கிடைத்தவுடன் இந்த உதவி நிறுத்தப்படும்.

வேலை தேடல் நிபந்தனைகள்: இந்த உதவியைப் பெற, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட புள்ளிகளை (points) பெற வேண்டும். இதற்கு 13 வேலை தேடல் செயல்பாடுகள் (job search activities) உள்ளன, இவை:

வேலை விண்ணப்பங்களை அனுப்புதல்

  1. தொழில் பயிற்சி (career coaching) அல்லது தொழில் தயாரிப்பு பட்டறைகளில் (workshops) பங்கேற்பது
  2. SkillsFuture இணையதளத்தில் பயிற்சி படிப்புகளில் பங்கேற்பது
  3. CareersFinder கருவி மூலம் தொழில் பாதையைத் திட்டமிடுதல்
  4. வேலைவாய்ப்பு முகமைகளில் (employment agencies) பதிவு செய்தல்
  5. தொழில்முறை நெட்வொர்க்கிங் (networking) செய்தல்.

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் புள்ளிகள் வழங்கப்படும், மேலும் ஒரு மாதத்தில் குறைந்தபட்ச புள்ளிகளைப் பெறாவிட்டால், அந்த மாதத்திற்கு பணம் கிடைக்காது. ஆனால், புள்ளிகள் அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 

சிங்கப்பூரில் Work Permit-ல் வேலை பார்க்குறீங்களா? இந்த சட்டத்தை பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

இதன் முக்கிய அம்சங்கள்:

புள்ளி அடிப்படையிலான அமைப்பு: வேலை தேடல் செயல்பாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதால், வேலை தேடுவோர் தங்களுக்கு ஏற்ற வழியில் முயற்சி செய்யலாம்.
மற்ற திட்டங்களுடன் இணைப்பு: இந்தத் திட்டத்துடன், SkillsFuture Level-Up Programme அல்லது Mid-Career Pathways Programme மூலம் பயிற்சி உதவித்தொகை (training allowance) பெற முடியும். எடுத்துக்காட்டாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுநேர பயிற்சியில் பங்கேற்றால், மாதம் S$3,000 வரை உதவித்தொகை பெறலாம், இது Jobseeker Support உடன் சேர்க்கப்படலாம்.

சில பேருக்கு எதிர்பாராத விதமா வேலை போயிருக்கும். ஆனா அவங்களால அதை நிரூபிக்க முடியாம இருக்கலாம். உதாரணத்துக்கு, சில பேர “resign” பண்ணச் சொல்லியிருப்பாங்க. இந்த மாதிரி சமயத்துல, Workforce Singapore (WSG) அவங்க நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு மதிப்பீடு பண்ணுவாங்கன்னு சொல்லியிருக்காங்க.

இந்தத் திட்டம், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு (S$5,000 அல்லது குறைவாக) உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் இதற்கு தகுதி பெறுவர், இது எதிர்பாராத வேலை இழப்பு அனுபவிக்கும் 60% பேரை உள்ளடக்கும். இதற்காக அரசு ஆண்டுக்கு S$200 மில்லியனுக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் இதன் நோக்கம் விரிவாக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, தன்னார்வமாக வேலை இடைவேளை எடுப்பவர்கள் (caregiving, personal illness) உள்ளிட்டவர்களுக்கு ஆதரவு வழங்கப்படலாம். மேலும், பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, பல தொழில் மாற்றங்களை (career shifts) எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம். இதற்கு, SkillsFuture Level-Up Programme மற்றும் Mid-Career Pathways Programme போன்ற திட்டங்களுடன் இணைந்து, இந்த Jobseeker Support Scheme முக்கிய பங்கு வகிக்கும்.

SkillsFuture Jobseeker Support Scheme, சிங்கப்பூரின் ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது. இது வேலை இழந்தவர்களுக்கு உடனடி நிதி ஆதரவை வழங்குவதோடு, அவர்களை மீண்டும் வேலைவாய்ப்பிற்கு தயார் செய்ய உதவுகிறது. எதிர்பாராமல் வேலை இழப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சவாலாக இருக்கலாம், ஆனால் இந்தத் திட்டம், வேலை தேடுவோருக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. அதேநேரம், வேலை தேடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம், தனிநபர் பொறுப்பை (personal responsibility) வலியுறுத்துகிறது.

சிங்கப்பூரின் பொருளாதாரம் மாறிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற திட்டங்கள் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. Workforce Singapore (WSG) மற்றும் மனிதவள அமைச்சகத்தின் (MOM) இந்த முயற்சி, வேலை இழந்தவர்களை உதவும் ஒரு முக்கிய படியாக அமைகிறது. மேலும் தகவலுக்கு, WSG இணையதளத்தை (https://www.wsg.gov.sg) பார்க்கவும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts