TamilSaaga

நியூ இயர் வந்தாச்சு… Skilled test ரிசல்ட் என்னாச்சு… சிங்கையில் Skilled test..? வெளியான சில கள நிலவரங்கள்

ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் skilled test இனி இல்லை என்ற பல தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து வந்த நிலையில், புத்தாண்டும் பிறந்து விட்டது. எப்படி இருக்கிறது இந்த நிலை. எதுவும் புது தகவல்கள் வந்ததா என களத்தில் இறங்கி விசாரித்தோம். அதுகுறித்து சில முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்து இருக்கிறது.

வெளிநாட்டு வேலை என்றாலே பலரின் செக் லிஸ்டில் முதலில் இருப்பது என்னவோ சிங்கப்பூர் தான். ஏனெனில் இங்கு உங்களுக்கு பாதுகாப்பு இருப்பதுடன் தமிழ்நாட்டினை போன்ற உணர்வே கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் கல்வி தகுதிக்கு ஏற்ப பாஸ்கள் பிரிக்கப்பட்டு வழங்கி வருகிறார்கள். இதனால் சம உரிமை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும். படித்தவர்கள் தங்களிடம் இருக்கும் டிகிரி அல்லது டிப்ளமோவில் சிங்கப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். சிலர் துறை அனுபவங்களில் வெளிநாடு செல்ல நினைக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பது தான் skilled test. ஒரு இன்ஸ்டியூட்டில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து தேர்வெழுதி பாஸ் செய்ய வேண்டும். இதில் கொடுக்கப்படும் சான்றிதழை வைத்து 10 வருடங்கள் உங்களால் சிங்கப்பூரில் இருக்க முடியும். இதில் ஏமாறுவதும் அரிது தான்.

சிங்கை நிறுவனங்களின் கோட்டா அளவை கொண்டு skilled test முடித்தவர்களை வேலைக்கு எடுத்து வந்தனர். ஆனால் இப்படி இன்ஸ்டியூட்களில் டெஸ்ட் எடுத்து விட்டு பலர் சிங்கப்பூர் வராமல் தவிர்த்தனர். இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கோட்டாக்கள் நிரம்பியவுடன் புதிய மற்றும் அதிக எண்ணிக்கையிலான கோட்டாக்கள் ரிலீஸ் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து skilled test நடைமுறைகளில் கூட மாற்றம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக நமக்கு சிங்கையை சேர்ந்த அதிகாரி கூட பேட்டி கொடுத்து இருந்தார். பலரும் எதிர்பார்த்து இருந்த புத்தாண்டும் பிறந்துவிட்டது. இதுவரை skilled test குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே இருக்கும் தகவலின்படி, ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் எல்லா குழப்பத்திற்கு விடை கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.

மேலும், செப்டம்பர் 30 வரை ஏற்கனவே டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்ட நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ரிசல்ட் குறித்த தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது. அதில் இன்ஸ்டியூட்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எனினும் பெரிய இன்ஸ்டியூட்கள் மீண்டும் பயிற்சி தொடங்கிவிட்டதால் ஜனவரி மாதத்திற்குள் ஒரு மாதத்திற்கான ரிசல்ட்டாவது வரும் என எதிர்பார்க்கலாம் எனக் கூறியிருக்கிறார்கள். மேலும் இதுகுறித்து வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை தமிழ் சாகா தளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts