சிங்கப்பூர் வரும் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் நடத்தப்படும் ஒரு நிகழ்வு தான் SIP என்று அழைக்கப்படும் Setting In Programme. வெளிநாட்டில் இருந்து வரும் புதிய ஊழியர்களுக்கு நமது சட்டதிட்டங்கள் என்பது புதிது. ஆகவே அதை அவர்களுக்கு விளக்குவதே இந்த SIPயின் நோக்கம்.
நேற்று 26.07.2022 அன்று வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த SIP நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் கலந்துகொண்டு உரையாடினார்.
“நாங்கள் சிங்கப்பூர் வந்துள்ள இந்த புதிய வெளிநாட்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்து உதவியதற்கு ACE குழுமம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறி தனது உரையை துவங்கினர் அவர்.
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் வெளியிட்ட பதிவு
சைக்கிள் பயன்படுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள்
சிங்கப்பூரில் புதிதாக பணிக்கு அமர்த்தப்படும் பல வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் தங்குமிடத்தில் இருந்து வேலையிடத்திற்கு செல்ல சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர். அப்படி மிதிவண்டிகளை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக எப்படி தங்கள் மிதிவண்டியை பயன்படுத்துவது என்பதை தெளிவுபடுத்தும் நிகழ்வு தான் இது என்றும் அவர் கூறினார்.
சாலைகளில் செல்லும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும், சாலை விதிகள் எப்படி?, என்பதை விளக்கும் காணொளி ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் புதிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் தனது முகநூலில் இதுகுறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.