TamilSaaga

சிங்கப்பூர்.. கத்தியால் குத்திவிட்டு லஞ்சம் கொடுக்க முயற்சி – பொய் சாட்சி சொன்ன சகோதரர்களும் கைது – 3 இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படியோடு கூடிய தண்டனை

சிங்கப்பூரில் ஒரு கத்திக் குத்துச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், தனது மேல்முறையீட்டின் போது பொய்யான சாட்சியத்தைக் கொடுப்பதற்காக தன்னால் பாதிக்கப்பட்ட இருவருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக தற்போது மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை பெற்றுள்ளார்.

நேற்று செவ்வாயன்று (ஜூலை 26) அவருக்கான நீடிக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2012ம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று சிங்கப்பூரின் லியாங் கோர்ட் பகுதியில் முரளீந்திரன் தூண்டி என்ற அந்த நபர் மூன்று பேரை கத்தியால் குத்தினார்.

53 வயதான அவர் பின்னர் குற்றம் சாட்டப்பட்டார், இறுதியில் 2015ல் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்பாடிகள் தண்டனையாக அவருக்கு விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​அவரது சகோதரர்களான சந்திரன் மாயழகு மற்றும் சுரேஷ் மாயழகு ஆகிய இருவரும் முரளீந்திரன் தான் குற்றவாளி என அடையாளம் காட்டினார்.

சிங்கப்பூர் TOTO Draw முடிவுகள்… ஒரே ஆளாக 6 கோடியே 87 லட்சத்தை வீட்டிற்கு அள்ளிச் சென்ற “லக்கி மேன்” – மூளையை கசக்கி அலசி வாங்கிய நம்பருக்கு கொட்டிய அதிர்ஷ்டம்!

ஆனால் முரளீந்திரன் தனது தண்டனை இரண்டையும் எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கறிஞர்கள் மூலம், அவர் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க ஒரு குற்றவியல் மனுவை தாக்கல் செய்தார், அதில் சந்திரனும் சுரஷும் தான் முரளீந்திரனை தாக்கியவர்கல் என்று பொய் உரைத்துள்ளார்.

பின்னர் தான், முரளீந்திரன், இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன், பொய்யான சாட்சியத்தை தாக்கல் செய்ய, சந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியில் வேண்டுமென்றே தவறான சாட்சியங்களை வழங்கியதற்காக, சந்திரன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 2020ல் அவர்களுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் முரளீந்திரனுக்கு இருவருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக தற்போது மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை பெற்றுள்ளார். இந்த மூவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர்கள் என்று சில தகவல்களும் வெளியாகியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts