உலக அளவு மக்களால் அதிகம் விரும்பப்படும் பொழுதுபோக்கு அம்சங்களில் Hot Air Balloonனும் ஒன்று என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் நமது சிங்கப்பூரில் முதன்முதலாக ஹாட் ஏர் பலூன் சேவை விரைவில் துவங்கவுள்ளது. Ballons Du Monde என்ற நிறுவனம் தான் இந்த சேவையை சிங்கப்பூரில் வழங்கவுள்ளது. மேலும் இப்பொது தங்கள் இணையதளம் மூலம் இந்த சேவைக்கான டிக்கெட் மற்றும் முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.
ஒரு முறை இந்த ஹாட் ஏர் பலூனின் பயணம் செய்ய ஒரு நபருக்கு S$265 செலவாகும், அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு மூன்று பேர் வரை பயணம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட இந்த விலை அந்நிறுவனம் வழங்கும் “துவக்க விழா சலுகை” என்பதால் நிச்சயம் எதிர்வரும் காலத்தில் இந்த விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் இதில் பயணிக்க பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கட்டாயம் முக கவசமும் அணிய வேண்டும்.
என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
50 நிமிட ஹாட் ஏர் பலூன் அனுபவத்தை இதன் மூலம் நீங்கள் பெறமுடியும்.
முதலில் இந்த ஹாட் ஏர் பலூன் பற்றிய அறிமுகம் உங்களுக்கு வழங்கப்படும், 5 முதல் 7 நிமிடங்கள் விண்ணில் நீங்கள் பறக்க முடியும். மது இல்லாத உணவும் உங்களுக்கு வழங்கப்படும், கூடுதலாக Site முழுவதையும் சுற்றிப்பார்க்க நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.
குறிப்பு : பயணிகளின் எடையைப் பொறுத்து குழுக்கள் மாற்றியமைக்கப்படலாம். மேலும் குழு சவாரிகளின் வரிசை குறிப்பிட்ட வரிசையில் இருக்காது. வானிலை காரணமாக உங்கள் முன்பதிவு மாற்றியமைக்கப்படலாம், மேலும் இப்பகுதியில் கழிவறை இல்லை என்பது நினைவுகூரத்தக்கது. தற்போதைய நிலவரப்படி மார்ச் மாதத்திற்கான புக்கிங் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது, அதேபோல நீங்கள் இந்த பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியாது.