SingapoRediscovers வவுச்சர்களின் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயண நிறுவனமான கான்டினென்டல் டிராவல்ஸுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏஜென்சியிலிருந்து உள்ளூர் சுற்றுப்பயணங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வவுச்சர்களுக்காக செலவு செய்யும் பணத்தை கேஷ் பேக் வழங்குவதாக கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது.
SingapoRediscovers வவுச்சர்கள் திட்டத்தின் கீழ் இது அனுமதிக்கப்படாது என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் சுற்றுலா வணிகங்களை ஆதரிப்பதற்காக இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் S$ 100 வவுச்சர்களைப் பெற்றனர், இது அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் வழங்கப்படும் சுற்றுப்பயணங்கள், இடங்கள் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்கள் போன்ற தகுதியான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படலாம்.
இதில் மோசடி செய்த சந்தேக நபர்கள் மூவரும் கடந்த செப்டம்பர் 27 அன்று கைது செய்யப்பட்டனர்.
அரசாங்க ஆதரவு திட்டங்களை மோசடி செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமான கண்காணித்து தவறு நடந்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.
கான்டினென்டல் டிராவல் சிங்கப்பூர் SingapoRediscovers வவுச்சர்கள் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது மற்றும் வவுச்சர்கள் சம்பந்தப்பட்ட புதிய முன்பதிவுகளை ஏற்க அனுமதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.