TamilSaaga

சிங்கப்பூர் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறுங்கள் – தூதரகம் அறிவிப்பு

மியான்மரில் தற்போது இருக்கும் சிங்கப்பூர் மக்கள் தங்களால் இயன்ற வரையில் மியான்மரை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று யாங்கோனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜீலை.15 ஆம் தேதி வெளியான ஒரு மின்னஞ்சலில் மியான்மரில் தற்போது மோசமாக உள்ள பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூர் மக்கள் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளது.

தற்போது வழக்கமாக பயண்பாட்டில் உள்ள நிவாரண விமான சேவையை பயன்படுத்தி வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளது சிங்கப்பூர் தூதரகம்.

இந்த நிவாரண விமான சேவையும் வழக்கமாக தொடரும் என்றும் உத்தரவாதம் அளிக்க முடியாது அதுபோல் தூதரகம் சார்பில் பிரத்யேக திருப்பி அனுப்பும் விமானமும் ஏற்பாடு செய்ய இயலாமல் போகலாம் எனவே முடிந்த வரை விரைவில மியான்மரில் வாழும் சிங்கப்பூர் மக்களுக்கு தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts