TamilSaaga

மலேசியர்களுக்கான மானிய விலை பெட்ரோல்.. சிங்கப்பூரர்கள் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது – முன்னாள் பிரதமர் பரபரப்பு புகார்

அண்டை நாடான மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சொந்த குடும்பமே தான் நேசித்த பெண்ணை தவறாய் பேச.. நம்பிக்கை வைத்து தாலி கட்டிய இளைஞர் – சிங்கப்பூரில் வேலைக் கிடைத்து இன்று ஊர் தரும் “Respect” வேற லெவல்!

நஜிப் வெளியிட்ட அந்த பதிவில், சட்டையில் வியர்வை படிந்த ஒரு மனிதன், மஞ்சள் கைப்பிடியுடன் கூடிய பெட்ரோல் Kiosk இயந்திரத்தை பயன்படுத்துவதை பார்க்கமுடிந்தது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அந்த காரையும் அந்த புகைப்படத்தில் தெளிவாக பார்க்கமுடிகிறது.

மலேசியாவை பொறுத்தவரை மஞ்சள் நிற கைப்பிடி கொண்ட பம்ப் என்பது Ron95 பெட்ரோலை வழங்குகிறது. இதில் வரும் பெட்ரோல் மலேசியாவில் ஒரு லிட்டருக்கு RM2.05 (S$0.66) என்ற விலைக்கு அந்நாட்டு அரசால் மானிய விலையில் மலேசியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்த Ron95 தர பெட்ரோலை வெளிநாட்டவர்களுக்கு விற்பது மலேசிய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த செயல் ஒரு குற்றச்செயலாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் சப்ளை கட்டுப்பாடு சட்டம் 1961ஐ மீறும் நபர்கள் அதிகபட்சமாக RM1 மில்லியன் (S$312,000) அபராதம், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும் என New Straits Times செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டினருக்கு பெட்ரோல் விற்பனை செய்வதை மலேசிய அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்று நஜிப் தனது பதிவில் கூறியுள்ளார். மேலும் “Ron95 பெட்ரோல் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகும், ஏனெனில் அதற்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. Ron95 ஐ வெளிநாட்டவர்களுக்கு விற்பது அரசின் வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு எதிரானது,” என்றும் அவர் கூறினார்.

அன்று தாய் சந்தித்த ஏளனம்.. கனலாய் எரிந்த மனம்.. இன்று மக்களை கியூவில் நிற்க வைத்து சாதித்த மகன் – சிங்கப்பூரின் அடையாளமாக உருவெடுத்த ‘தி ஒரிஜினல் வடை’ உணவகம்

“பெட்ரோல் விலையை பொறுத்தமட்டில் இது உலக அளவில் வழங்கப்படும் 11 வது மிகக் குறைந்த விலையாகும். மேலும் இது சில முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகளை விட மலிவானது,” என்று அவர் தெரிவித்தார்.

நஜிப்பின் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, மலேசியாவில் உள்ள உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் “வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் விற்பனை செய்வதை நிறுத்துவதாக” அறிவித்துள்ளது என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts