TamilSaaga

சிங்கப்பூரில் மேலும் ஒரு தொழிலாளி பலி.. இதுவரை 30 பணியிட மரணங்கள் பதிவு.. 8 நாட்கள் உயிருக்கு போராடிய தொழிலாளி – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் பணியிடத்தில் மரத்துண்டால் தாக்கப்பட்ட ஒரு தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த புதன்கிழமை (ஜூலை 13) இறந்துள்ளார். இந்த சம்பவம் இந்த ஆண்டு ஏற்பட்ட பணியிட இறப்பு எண்ணிக்கையை 30 ஆக உயர்த்தியுள்ளது.

பைல் லோட் (தரையை வலுப்படுத்த செய்யப்படும் பணி) சோதனையில் பயன்படுத்தப்பட்ட மரத்துண்டு உடைந்தபோது, அந்த ​​51 வயதான சிங்கப்பூரர் அந்த மரத் துண்டுகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து கடந்த ஜூலை 6ம் தேதி காலை 10 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று வியாழக்கிழமை (ஜூலை 14) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த அந்த நபர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்களால் அவர் இறந்துள்ளார்.

சிங்கப்பூர் வந்திறங்கினார் கோத்தபய ராஜபக்ச.. அவர் சிங்கை வர “இது தான் காரணம்” – பளிச்சென்று பதில் சொன்ன MFA!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் இந்த இறப்பு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது, மேலும் அனைத்து பைலிங் நடவடிக்கைகளையும் நிறுத்த சம்மந்தப்பட்ட இடத்தின் ஒப்பந்ததாரர் BBR பைலிங்கிற்கு அறிவுறுத்தியுள்ளது.

பைலிங் என்பது ஒரு கட்டுமான செயல்முறையாகும், இது அதிக சுமைகளை தாங்கும் வகையில் பலவீனமான மண்ணுக்கு அதிக கட்டமைப்பு வலிமையை வழங்குவதற்காக தரையின் அடித்தளங்களை துளையிடுவதை உள்ளடக்கியது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை, கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனமான டேகேனகா கார்ப்பரேஷன் தான் விபத்து நடந்த பணியிடத்தை தற்போது கையாண்டு வருகின்றது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts