TamilSaaga

சிங்கப்பூர் வந்திறங்கினார் கோத்தபய ராஜபக்ச.. அவர் சிங்கை வர “இது தான் காரணம்” – பளிச்சென்று பதில் சொன்ன MFA!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, நேற்று முன்தினம் தனது நாட்டிலிருந்து வெளியேறிய நிலையில் அவர் மாலத்தீவிற்கு சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அங்கிருந்து நேற்று வியாழக்கிழமை (ஜூலை 14) அன்று சிங்கப்பூர் வந்தடைந்தார் என்று சிங்கப்பூர் அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் “திரு. ராஜபக்ஷ “தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூருக்கு வந்ததை உறுதிப்படுத்தியது, மேலும் அவர் அடைக்கலம் நாடி இங்கு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

“அவர் சிங்கப்பூர் அரசிடம் புகலிடம் கேட்கவில்லை என்றும் அவருக்கு எந்த புகலிடமும் சிங்கப்பூர் அரசால் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் பொதுவாக புகலிடம் கோரும் கோரிக்கைகளை ஏற்பதில்லை” என்றும் MFA செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“மரண தண்டனை இனி வேண்டாம்”.. சிங்கப்பூர் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய மாணவர் – NUS பட்டமளிப்பு விழாவில் நடந்த சர்ச்சை

சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்ட ஒரு அறிக்கையிலும், திரு. ராஜபக்ஷ “தனிப்பட்ட பயணத்தில் தான் சிங்கப்பூர் வந்துள்ளார்” என்று வலியுறுத்தியுள்ளது. “பொதுமக்கள், சிங்கப்பூரர்கள், குடியிருப்பாளர்கள், பணி பாஸ் பெற்றவர்கள் மற்றும் சமூக பார்வையாளர்கள் அனைவரும் நமது உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

“அதே போல சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடக்கும் பொதுக்கூட்டத்தில் யார் பங்கேற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளது. கடும் பரபரப்புக்கு மத்தியில் இன்று ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

சிங்கப்பூர் வந்த ராஜபக்ச தனது சொந்த விருப்பத்தில் வந்துள்ளார் என்றும் அவருக்கு எந்தவித சலுகையோ அல்லது அடைக்கலாமோ தரப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சிங்கை அரசு.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts