TamilSaaga

ஒரே மாதத்தில்.. இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் அதிகரித்த டிமாண்ட் – Work Permit வைத்திருப்பவர்களுக்கு குவியும் வாய்ப்புகள்

உலக அளவில் உள்ள இக்கால இளைஞர்களுக்கு சொர்கபுரியாக விளங்கும் ஒரு நகரம் உண்டு என்றால் அந்த பட்டியலில் நிச்சயம் நமது சிங்கப்பூரும் இருக்கும். காரணம் இங்கு நிலவும் நல்ல சூழலும் உழைப்புக்கு ஏற்றவாறு கிடைக்கும் ஊதியமும் தான் என்றே கூறலாம்.

அந்த வகையில் பல நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சிங்கப்பூரை நோக்கி வேலைக்காக படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் இளைஞர்கள் ஆண்டுதோறும் சிங்கப்பூர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இந்த தொற்று நோய் தற்போது மெல்ல மெல்ல நம்மை விட்டு விலகி வருகின்றது, அடைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பெரிய அளவில் வேலை கிடைக்காமல் இருந்த நிலையில்அந்த நிலை தற்போது மாறியுள்ளதா என்பதே பல இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.

அதற்கு பதில் ஆம் மாறியுள்ளது என்பதே.. சரி அதை வெறும் வாய் வார்த்தையாக கூறலாம் சற்று புள்ளிவிவரங்களோடு பின்வருமாறு காணலாம்.

மேலும் படிக்க – ‘ஏதோ தவறாக நடக்கிறது!’.. மிகவேகமாக விரிவடையும் பிரபஞ்சம்.. குழப்பத்தில் நாசா விஞ்ஞானிகள்

சில வாரங்களுக்கு முன்பு மனிதவள அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் அரசு வெளியிட்ட அறிக்கையில் Entry Approval இல்லாமல் ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதாவது மலேசியர்கள் அல்லாத Work Permit வைத்திருக்கும் ஊழியர்கள் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தற்போது சிங்கப்பூர் வர பெரிய அளவில் கெடுபிடிகள் இருக்காது. மேலும் சிங்கப்பூர் SBF (Singapore Business Federation) வெளியிட்ட ஒரு தகவலின்படி உள்ளூர் வணிகங்கள் துவண்டுள்ள தங்கள் வியாபாரத்தை மீட்டெடுக்க வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

உணவு, கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில், சிங்கப்பூரில் தற்போது மனிதவ பற்றாக்குறை நிலவுவதை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகமே சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதை நாம் அறிவோம்.

ஆகவே தொற்றுநோய்க்கு பிந்தைய இந்த காலகட்டத்தில் மனிதவளத்தை அதிகரிக்க உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் கணிசமான அளவில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த சிங்கப்பூர் தயாராக உள்ளது. ஆகவே உரிய பயிற்சியோடு காத்திருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் நிச்சயம் சிங்கப்பூரில் நல்ல வேலை விரைவில் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts