சிங்கப்பூரில் வேலை செய்தால் குடும்பத்தின் பொருளாதாரம் பெரிய நிலையில் சென்று விடும் என்ற ஆசையில் தான் பலரும் சிங்கைக்கு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு அது நல்லதாக அமைந்து விடும் நிலையில், சிலருக்கு வாழ்க்கையே மோசமாகி விடுகிறது. மொத்த குடும்பத்தினையும் நிர்கதியாக நிற்க வைத்து விட்டு உயிரிழப்பு சம்பவத்தினை கேட்கும் போதெல்லாம் பலரும் தங்கள் பிள்ளைகளை, கணவரை நினைத்து மனம் வெதும்பும் நிலையும் தான் இருக்கிறது.
இப்படி ஒரு உயிரை தொலைத்து விட்டு நிற்கும் குடும்பத்துக்கு இன்னொரு பெரிய நரகமாக இருப்பது என்னவோ அவர்களை கடைசியாக பார்க்க ஆசைப்பட்டு உடலை தாயகம் எடுத்து வர நினைக்கும் போது அவர்கள் அலைக்கழிக்கப்படுவது. சரி அதையும் மீறி அனுமதி கிடைத்து விட்டால் அதற்கு லட்சங்களில் ஆகும் செலவையுமே குடும்பத்தினர் தான் கொடுக்க வேண்டும். இது எத்தனை பெரிய கொடுமை. இறந்த உயிரை நினைத்து அழுவதா இல்லை காசை ரெடி செய்ய அலைவதா என ஆதங்கமே இங்கும் பலரிடத்திலும் இருக்கிறது. அடிக்கடி இப்படி ஒரு சம்பவத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: என்னத்தான் ஆச்சு சிங்கப்பூருக்கு… தொடர்ந்து மூடப்படும் பலவருட கடைகள்… முதுமையிலும் போராடியவர்களின் திடீர் முடிவின் பின்னணி
சமீபத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பிரபாகரன் செல்வராஜூ கடந்த மார்ச் 10ந் தேதி இறந்து விட்டார். இறப்புக்கான விரிவான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் அவரது உடலை தமிழகம் எடுத்து செல்ல குடும்பத்தினர் முயன்று இருக்கின்றனர். அலைக்கழைப்பு ஒரு பக்கம், அதற்கான செலவுகள் ஒரு பக்கம் என என்ன செய்வது என தெரியாமல் தவித்து நின்று இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டினை சேர்ந்த புதுக்கோட்டை எம்.பி முகமது அப்துல்லா இந்த குடும்பத்தினருக்கு உதவ முன்வந்து இருக்கிறார். அவர் இந்தியன் தூதரகம் மூலம் அந்த ஊழியரின் உடலை எடுத்து வர கோரிக்கை விடுத்து இருக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்குள் அவரது உடல் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியது. எல்லா செலவுகளையும் எம்.பி தரப்பிலே பார்த்துக்கொள்ள ஒருவழியாக கடைசியாக தன் மகனின் முகத்தினை அந்த பெற்றோர் பார்த்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் Dorms… சுத்தமான தரை… ஆரோக்கியமான கழிப்பறை… இதை செய்தாலே போதுமே? ஏக்கத்தில் ஊழியர்கள்
சிங்கையில் பெரிய பொறுப்பில் இருந்த பிரபாகரன் பாஸ்போர்ட் ஒரு பக்கம் ரினிவல் இருந்ததும் இதில் பிரச்னையாகி இருக்கிறது. பெரிய பணியில் இருந்தவருக்கே இந்த சோதனை என்றால் General worker குடும்பத்தின் நிலையை நினைத்து பார்க்கவே முடியாமல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் கணவன் உடலுக்காக போராடி சாக துணிந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கடைசியில் கூட அவர் உடல் கிடைக்காமல் போகும் க.பெ.ரணசிங்கம் படத்தின் உண்மை நிலை தான் இன்றும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.