TamilSaaga

சிங்கப்பூரில் கையும் களவுமாக சிக்கிய வெளிநாட்டு ஊழியர்.. சம்பளத்தில் முக்கால்வாசி அபராதம் – ‘தெரியாம செஞ்சிட்டேன்’ என்று வேதனை!

SINGAPORE: வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்யும் போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய இடத்தில், இப்படி எனக்கென்ன மோடில் இருந்தால் இதுதான் பரிசாக கிடைக்கும்.

சிங்கப்பூரில் மரைன் பரேடில் பெயிண்டிங் வேலை செய்து வந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மறைத்து வைத்து உபயோகித்து வந்துள்ளார்.

33 வயதான பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அந்த ஊழியர், அந்த சட்டவிரோத சிகரெட்டுகளை ஒரு வீட்டு வசதி வாரியத் தொகுதியில் நின்று புகைத்துக் கொண்டிருந்த போது, சுங்க அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து அவருக்கு 500 டாலர்கள் உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அந்த ஊழியரின் மொத்த ஊதியத்தில் முக்கால்வாசி தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள அந்த ஊழியர், “”இங்கே ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை என் சம்பளத்திற்கு கட்டுப்பாடு ஆகாது. ரொம்ப காஸ்ட்லியாக உள்ளது. நான் தங்கியிருக்கும் Dormitory-ல் இருந்து வெறும் 5 டாலருக்கு தான் அந்த சிகரெட்டை வாங்கினேன். 20 சிகரெட்டுகள் அடங்கிய வரி செலுத்தப்பட்ட சிகரெட்டுகள் இங்கு 12 முதல் 14 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ட்ரோன் மூலம் யுனிவர்சிட்டி விட்டு யுனிவர்சிட்டி பறந்த காதலன்… சத்தம் போடாமல் காதலியை ஃபோட்டோ எடுக்க நினைத்து சிக்கிய பரிதாபம்!

மேலும், சட்டவிரோத சிகரெட்டுகளை இனி பயன்படுத்த மாட்டேன் என்றும், அவ்வாறு செய்வது மதிப்புக்குரியதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

சீனாடவுன் மற்றும் கெய்லாங் பகுதிகளில் கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட ரெய்டில் 32 மற்றும் 70 வயதுடைய 33 நபர்கள் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை பஉபயோகித்து பிடிபட்டனர்.

அவர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள், மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த 33 நபர்களில், 25 பேருக்கு சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்ததற்காக $500 முதல் $1,300 வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஆறு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கவனமாக இருங்க ஊழியர்களே.. சிக்கினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts