சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காத நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களின் அனுமதி அல்லது பாஸ் ரத்து செய்யப்படும் என்று சிங்கப்பூர் அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளது. “நிரந்தர குடியிருப்பாளர்கள் (PRs) மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கத் தவறினால் அவர்களின் அனுமதி அல்லது பாஸ் ரத்து செய்யப்படலாம்” என்று சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் ஜியாங்சு மாகாணத்திற்கு பயண வரலாறு கொண்ட பயணிகளுக்கு கடுமையான எல்லை நடவடிக்கைகளை தற்போது அறிவித்துள்ளது சிங்கப்பூர். அங்கு பெருந்தொற்று வழக்குகள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு பயண வரலாறு கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வரும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அறிவிப்பை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து MOH வெளியிட்ட அறிவிப்பில் இந்த நடவடிக்கை வரும் திங்கள் இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகின்றது தற்போதைய நடவடிக்கைகளின் கீழ், சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் கடந்த 21 நாட்களுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு பயண வரலாற்றோடு சிங்கப்பூரில் நுழையும்பட்சத்தில், அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஏழு நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.
மேலும் அவர்கள் நாடு திரும்பும்போதும், 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடிக்கும்போதும் கட்டாய PCR சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.