TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.
TOTO மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் Singapore Pools அமைப்பை நடத்தி வரும் சிங்கப்பூர் டோட்டலைசர் போர்டுக்கு செல்கிறது. இந்த தொகை முழுவதும் தொண்டு பணிகள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
TOTO வரலாறு :
1960களில் சிங்கப்பூரில் பெருமளவிற்கு பரவி இருந்த சட்ட விரோத சூதாட்டங்களை கட்டுப்படுத்தவதற்காக 1968 ம் ஆண்டு TOTO ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1981 ல் இது கணினி மயத்திற்கு மாற்றப்பட்டது. பல விதமான ஆன்லைன் விளையாட்டுக்களை இது அறிமுகம் செய்தது. தற்போதுள்ள TOTO ஆன்லைன் முறை 2016ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது.
சிங்கப்பூரில் நடந்த TOTO அதிர்ஷ்டக் குலுக்கில் இருவர் அதிர்ஷ்டசாலிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் இணைந்து மொத்தம் 6.08 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை வென்றுள்ளனர். இதன் பொருள் ஒவ்வொருவரும் சுமார் 3.04 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை வென்றுள்ளனர். இந்த வெற்றியானது, அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும்.
TOTO லாட்டரி… எப்படி பங்கேற்பது? ஈஸியாக டாலர்களை சம்பாதிக்க வழி இருக்கா?
முதல் வெற்றியாளர்: யீஷுன் அவென்யூ 5-ல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் இருந்து ஒரு டாலருக்கு சீட்டு வாங்கியுள்ளார். இது, சாதாரணமாக மக்கள் TOTO சீட்டுகளை வாங்கும் ஒரு இடம் என்பதைக் காட்டுகிறது.
இரண்டாவது வெற்றியாளர்: இணையம் வழியாக சீட்டு வாங்கியுள்ளார். இது, TOTO-வை ஆன்லைனில் வாங்கும் வசதி எவ்வளவு எளிமையானது என்பதை காட்டுகிறது.
எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி ஜனவரி 16 இன்று நடக்க உள்ள TOTO குலுக்கலில் வெல்லப்படும் பரிசுத் தொகை சுமார் 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர்.
www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்
TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.