TamilSaaga

சிங்கப்பூர் Toa Payohவில் தீ விபத்து : தயவு செய்து “அதை செய்யாதீர்கள்” – பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் SCDF

சிங்கப்பூரில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கவிருந்த நேரத்தில் Block 52 Lorong 6 Toa Payoh பகுதியில் நேற்று 31 ஜனவரி இரவு சுமார் 10.25 மணியளவில், மேலே குறிப்பிடப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” : சிங்கப்பூர் முதலாளி வழங்கிய போனஸ் – மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்ட தமிழக தொழிலாளி

SCDF வருவதற்கு முன், பாதிக்கப்பட்ட பிரிவில் இருந்த இரண்டு குடியிருப்பாளர்கள் உட்பட சுமார் 20 பேர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட தொகுதியிலிருந்து 30 பேரை காவல்துறை மற்றும் SCDF வெளியேற்றியது.

இந்த சம்பவதின்போது இருவர் புகையை உள்ளிழுத்த காரணங்களுக்காக SCDF படையினரால் மதிப்பீடு செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட மறுத்துவிட்டனர். அவர்களுக்கு வேறு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் SCDF முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், பவர் அசிஸ்டட் சைக்கிளின் (PAB) பேட்டரி பேக்கில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

சுதந்திர வாழ்க்கை எப்போது? விலங்குகளா நாங்கள்? – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேதனை.. ஏன்?

SCDF PMD/PAB தீயைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்பும் விஷயமாக, பேட்டரிகளை நீண்ட நேரம் அல்லது ஒரே இரவில் சார்ஜ் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. அசல் அல்லாத பேட்டரிகளை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்றும், மேலும் தீ பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுக்கு அதனுடன் உள்ள விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts