TamilSaaga

“சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2022” : பக்தர்கள் பால்குடம் எடுக்க புதன்கிழமை முதல் முன்பதிவு துவக்கம் – லிங்க் உள்ளே

சிங்கப்பூரில் வருகின்ற 2022ம் ஆண்டில் தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதத்தின் 18ம் நாளில் நடக்க உள்ளது. மேலும் தற்போது உலகெங்கிலும் பரவி வரும் புதிய வகை தொற்றுக் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் நடைபயணம் செய்யவும், காவடி எடுக்கவும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “வரலாற்று வெற்றியை பதிவு செய்தது சிங்கப்பூர்”

இந்த தொற்று காரணமாக பக்தர்களின் நடைபயணம் மற்றும் காவடி எடுக்கும் திருவிழா தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தடைபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ளேயும் அங்கு நடக்கும் விழாக்களிலும் அனுமதிக்கப்படுவர். அதே போல இந்த ஆண்டும் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் வேண்டுதலை நிறைவேற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும், குறிப்பாக கோவிலில் முன்னதாகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. பால்குடம் எடுக்க விரும்புபவர்கள் வரும் டிசம்பர் 22ம் தேதி முதல் இணையவழியில் இதற்கு முன்பதிவு செய்யலாம் என்று சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் நிர்வாகமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் மொட்டை போட விரும்புபவர்கள் டிசம்பர் 29ம் தேதி முதல் இணைய வழியில் இதற்கான முன்பதிவு செய்யலாம். தொற்று பரவலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்த நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்குள் சென்று கடவுளை தரிசிக்க விரும்புபவர்களும் அதற்கான நேரத்தை இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

முன்பதிவு இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள், கோவிலுக்கு வெளியேறும் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts