TamilSaaga

“நாளை முதல் அமலுக்கு வரும் தளர்வு” – மக்களிடம் உள்ள பொதுவாக சில கேள்விகள் : அரசு தரும் பதில்கள்

சிங்கப்பூரில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் தடுப்பூசி நிலையின் அடிப்படையில் சமூகக் கூட்டங்களில் மாறுபட்ட விதிகளை அமல்படுத்தத் அரசு தயாராகவுள்ளது. இது நாட்டில் பல பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் இத்தகைய வேறுபட்ட விதிகள் எவ்வளவு காலம் நீடிக்கும், தடுப்பூசி போடப்படாத மற்றும் தடுப்பூசி போடப்படாத மக்கள் எப்போது சமமான நிலையில் சந்திக்க முடியும்? என்று பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்களிடம் எழும் பல சந்தேகங்களுக்கு அரசு தற்போது பதில் அளித்துள்ளது. அந்த கேள்விகளையும் பதிலையும் இந்த பதிவில் காணலாம்.

கேள்வி : நான் தடுப்பூசி போடவில்லை, இருப்பினும் நான் பெருந்தொற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்த பிறகு ஒரு உணவகத்தில் அமர்ந்து என்னால் உணவு உண்ண முடியுமா?

பதில் : முடியும்..

புதிய விதிகளின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் உணவகங்களில், ஹாக்கர் மையங்கள் மற்றும் காபி கடைகளை தவிர, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமர்ந்து சாப்பிடலாம். நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் சரியான எதிர்மறை சான்றிதழ் இருந்தால் (கடந்த 24 மணிநேரத்தில் எடுத்து), நீங்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உன்ன முடியும்.

கேள்வி : நான் நிகழ்வுக்கு முந்தைய சோதனையை எங்கே பெற முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும்? முடிவுகள் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

பதில் : ஆன்டிஜென் விரைவான சோதனைகளை வழங்கும் கிளினிக்குகளின் பட்டியல் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் உள்ளது. ஒவ்வொரு கிளினிக்கிலும் சோதனைக்கு கட்டணமாக 30 முதல் 100 டாலர் வரை செலவாகும். அவை 24 மணிநேரம் வரை செல்லுபடியாகும்.

கேள்வி : தடுப்பூசிக்கு என்ன வகையான ஆதாரம் காட்ட வேண்டும்? நான் வெளிநாட்டில் தடுப்பூசி போட்டிருந்தாள் என்ன செய்வது?

பதில் : TraceTogether அல்லது HealthHub மொபைல் பயன்பாடுகளில் காட்டப்படும் உங்கள் தடுப்பூசி நிலையை நீங்கள் காட்ட வேண்டும். வெளிநாடுகளில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது செயலிகள் இல்லாதவர்கள் தடுப்பூசியின் சான்றிதழ் நகல் ஆதாரத்தையும் காட்டலாம்.

Related posts