TamilSaaga

சிங்கப்பூர் வானில் தோன்றும் “Blue Moon” – நம்மால் பார்க்கமுடியுமா? எப்போது பார்க்கலாம்? முழு விவரம்

பெருந்தொற்று பரவல் காரணத்தால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு 2021 சற்று தாமதமாக இன்று நடைபெறுகின்றது. இதே போல இன்னொரு சுவாரசியமான நிகழ்வும் நாளை சிங்கப்பூர் மக்கள் எதிர்நோக்க உள்ளனர். அது தான் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று நிகழ்வும் நீல நிலவு நிகழ்வு.

சிங்கப்பூர் நேரப்படி நாளை ஆகஸ்ட் 22 அன்று நீல நிலவு இரவு 7:15 மணிக்கு உதயமாகத் தொடங்கும். இருப்பினும், முழு நிலவு சரியாக இரவு 8:01 மணிக்கு தெரியும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தெளிவாக உள்ள பட்சத்தில் மக்கள் அனைவரும் இந்த நிலவை பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

இந்த ப்ளூ மூன் என்ற வானியல் நிகழ்வு கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வருகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த ப்ளூ மூன் முழு நிலவு உதயமாகும் போது, ​ஆரஞ்சு நிறத்தில் தோன்றும், மேலும் நிலவு உச்சிக்கு வரும்போது வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்.

முந்தைய வரையறையின்படி, நான்கு முழு நிலவுகள் மூன்று மாத கால எல்லைக்குள் வரும்போது பருவகால நீல நிலவு ஏற்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பருவகால நீல நிலவு குறிப்பாக நான்கு முழு நிலவு வரிசையில் மூன்றாவது முழு நிலவை குறிக்கிறது. இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

Related posts