TamilSaaga

சிங்கப்பூர் தாய்லாந்து இணைந்து புதிய கையெழுத்து – மின்னிலக்க பொருளாதாரம் சார்ந்த திட்டத்துக்கு அடித்தளம்

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து இடையில் இணைய வழியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசம் தியோ அவர்களும், தாய்லாந்து மின்னிலக்க பொருளியல் அமைச்சர் Chaiwut Thanakamanusorn அவர்களும் பங்கேற்றனர்.

இந்த இணைய வழி நிகழ்ச்சியில் மின்னிலக்க பொருளியலை மேம்படுத்துதல், மனித வள வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் 5G இணைய சேவைக்கான அம்சங்கள் ஆகியன குறித்து பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பான ஒரு இணக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சிங்கப்பூர் – தாய்லாந்து இடையேயான மின்னிலக்க பொருளியல் தொடர்பு, வர்த்தகம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் வகையில் இந்த இணக்கக் குறிப்பு ஒப்பந்த கையெழுத்தானது வழிவகுக்கும் என அமைச்சர் தியோ தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை மேம்பாடு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts