TamilSaaga
TDFRP

மாணவர்களுக்கு உடல் உபாதை : TDFRP திட்டத்தை உடனே நிறுத்திய சிங்கப்பூர் – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் கலைப் பள்ளியில் (SOTA) உள்ள சில மாணவர்களுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக Total Defense Food Resilience எனப்படும் பாதுகாப்பு உணவு மீள்தன்மை தயாரிப்பு திட்டம் சிங்கப்பூர் அரசால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு “பள்ளியின் பாதுகாப்பு தின” செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, உணவு மீள்தன்மை தயாரிப்பு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் இந்த உணவை உட்கொண்டனர். அதில் SOTA எனப்படும் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கு, அந்த உணவை உட்கொண்ட பிறகு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு கொண்டுசெல்லபடவில்லை என்றும், அவர்களை ஆசிரியர்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று பிப்ரவரி 19ம் தேதி விநியோகிக்கப்பட்ட, உட்கொள்ளப்படாத உணவுகளை SOTA மீண்டும் திரும்பப்பெற்று வருகின்றது. மேலும் இந்த விஷயத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இது குறிப்பிட்ட அந்த பள்ளியில் நடந்த ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஷயம் தொடர்பாக, உணவு அளிக்கப்பட்ட வேறு எந்த இடத்தில் இருந்தும் புகார்கள் எழவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதற்காக SFA மற்றும் MOE ஆகியவை இணைந்து தொடர் சோதனைகளை நடத்தும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts