TamilSaaga

சிங்கப்பூர் Sex பயிற்சியாளர் : கருப்பையின் சிறப்பை உணர்த்தும் NFT-கள் விற்பனைக்கு – குவியும் மக்களின் பாராட்டு

சிங்கப்பூரில் செக்ஸ் மற்றும் Intimacy பயிற்சியாளர் ஒருவர், சர்வதேச மகளிர் தினத்தின் (மார்ச். 8) நினைவாக, சில NFT Tokenகளை வெளியிட்டுள்ளார். NFT டோக்கன் என்பது கடந்த சில வருடங்களாக வைரலாகி வரும் ஒரு விஷயம் தான். Crypto Currency மூலம் செயல்படுத்தப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று, Opensea என்ற தலத்தில் மக்கள் தங்கள் NFTகளை விற்கலாம். அது வீடியோ, ஆடியோ, GIF, JPG என்று எந்த ரூபத்தில் வேண்டுமாலும் இருக்கலாம். இந்த NFTகள் Ethereum என்ற Crypto Currency அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் 1 Ethereum என்பது இந்திய மதிப்பில் 2 லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் தடையை மீறி நடந்த புத்தாண்டு கொண்டாட்ட வழக்கு – இரு இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு அபராதம்

இந்நிலையில் சிங்கப்பூரின் Academy of Relationship and Sex (ARAS) மூலமாகவும், உள்ளூர் கலைஞரான MOKO உடன் இணைந்தும், Intimacy பயிற்சியாளரான ஏஞ்சலா டான், கருப்பை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இரண்டு NFTகளை அறிமுகப்படுத்தியுள்ளார். “நாம் முதலில் உருவாகும் இடம் இது தான், ஆகையால் ஒரு கருப்பையின் பணியை நாம் போற்றிப்புகள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். அந்த இரண்டு NFTகளில் ஒன்று தான் “Floral Matrix” இதன் ஆரம்ப விலையாக 0.002 ETH (S$6.89) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல இவர்கள் உருவாக்கிய இரண்டாவது NFT “Womb of Life” ஆரம்ப விலையாக 0.075 ETH (S$258.32) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த NFT களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, வறுமையை ஒழிப்பதற்காக பணி செய்யும் NGOகளுக்கு ஆதரவு அளிக்க செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ARAS என்ற அந்த நிறுவனம் Tan என்பவார்கள் உருவாக்கப்பட்டது, மகளிருக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாதவிடாய் போன்ற பல செயல்பாடுகள் மறைக்கக்கூடியதோ அல்லது அருவறுக்கத்தக்கதோ இல்லை என்பதை உணர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதுக்கு தான் சிங்கப்பூரிலேயே உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்குறாங்களா? – படித்த பல்கலைக்கழகத்திலேயே “கைவைத்த” IT Engineer

ARAS’s நிறுவனம் இன்னும் பல NFTகளை வியாபார நோக்கத்தோடு இல்லாமல் மகளிருக்கான உதவிகளை செய்யும் தலமாக கொண்டு செயல்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts