சிங்கப்பூரை பொறுத்தவரை பல உயர் பதவிகளிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சிங்கப்பூர் Singapore Civil Defense Force என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதனுடைய முகநூலில் ஒரு சிறப்பான விஷயத்தை வெளியிட்டுள்ளது.
கேப்டன் ஷவித்யா சண்முகம் குறித்த பதிவு தான் அது, இந்த மே மாதம் முழுவதும் கேப்டன் ஷவித்யா தனது குழுவுடன் இணைந்து 24 மணி நேரமும் மக்கள் சேவையில் குறிப்பாக பல்வேறு நாடு தழுவிய பெரிய அளவிலான நிகழ்வுகளின் போது சந்தேகத்திற்குரிய இரசாயனம் தொடர்பான விபத்து சம்பவங்களுக்கு பதிலளிக்க தயாராக இருப்பார்.
SCDFன் பயிற்சி மற்றும் தொழில் வளர்ச்சி துறையை சேர்ந்த கேப்டன் ஷவித்யா அவசர மதிப்பீடு மற்றும் பதிலளிப்புக் குழுவின் (HEART – Hazmat Emergency Assessment and Response Team) உறுப்பினராக செயலாற்றவுள்ளார்.
SCDF வெளியிட்ட அந்த பதிவில் ஷவித்யாவுக்குப் பின்னால் நிற்பது தான் சிங்கையின் HazMat கட்டுப்பாட்டு வாகனம் (HCV). அதன் ஏவுதளம் நீடிக்கப்படும்போது அதன் மீது ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) ஒன்று செயல்பட துவங்கும்.
இரசாயன விபத்து ஏற்பட்டால், UAV வாகனத்தில் இருந்து பயன்படுத்தப்படுவதற்கு முன்பு இரசாயன கண்டுபிடிப்பாளர்களுடன் அது இணைக்கப்படலாம், அவர்களுடைய பணியை அது இலகுவாக்கும். மேலும் விபத்து நடந்த இடத்தில் உள்ள மாசுபாட்டின் புவியியல் பரவலை மட்டுமல்ல, பரவலின் உயரத்தையும் அளவிட அந்த கருவியால் முடியும்.
இந்நிலையில் SCDF மாதம்தோறும் வெளியிடும் காலண்டரில் ஒவ்வொரு அதிகாரியையும் பெருமைப்படுத்தவுள்ளது. அந்த வகையில் இந்த மே மாதத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷவித்யா சண்முகம் அவர்களின் புகைப்படம் இடம்பெறுகின்றது.