சிங்கப்பூருக்கு வேலைக்கு வர நிறைய வொர்க் பாஸ்கள் இருக்கிறது. இதில் ஒன்றினை அப்ளே செய்து வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் பலரும் இருப்பார்கள். ஆனால் சரியான விஷயங்களை தெரிந்து கொண்டால் நல்ல சம்பளத்தில் சூப்பர் வேலையில் செட்டில் கூட ஆகிவிடலாம்.
சிங்கப்பூரில் நல்ல சம்பளம் தரும் ஒரு வேலை தான் Safety Coordinator. இந்த வேலை safety supervisorக்கு மேல் உள்ள பணியிடம். Coordinator கோர்ஸ் படிக்கும் முன்னரே நீங்க supervisorக்கு படித்து விட வேண்டும். இது முடித்து ஒரு வருடம் கழித்து தான் coordinator கோர்ஸ் சேர முடியும்.
இதையும் படிங்க: Marine Shipyard சிங்கப்பூரில் துறையில் வேலைக்கு சேரணுமா? 1200 சிங்கப்பூர் டாலர் சம்பளமா? அதுக்கு முன்ன இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க
உங்களின் இருப்பிடத்துக்கு அருகில் இருக்கும் இன்ஸ்ட்டியூட்களில் Safety coordinator கோர்ஸ் பயிற்சி கொடுக்கப்படும். முதலில் விசாரித்து கொள்ளுங்கள். அதிக தூரத்தில் இருக்கும் இன்ஸ்ட்டியூட்டினை தேர்வு செய்ய வேண்டாம்.
இந்த Safety coordinator கோர்ஸுக்கு 28 ஞாயிற்றுக்கிழமைகளில் க்ளாஸ் எடுக்கப்படும். கிட்டத்தட்ட இது 7 மாதம் நடக்கும். அல்லது வார நாளில் மாலை 6 முதல் 10 வரை க்ளாஸ்களும் நடக்கும். அதற்கு 3.5 மாதங்களில் முடிந்து விடும். இது batchஆக நடக்கும் என்பதால் ஒரு batch கூறப்பட்ட நபர்கள் அட்மிஷன் முடிந்தவுடன் அந்த கோர்ஸ் தொடங்கப்பட்டு விடும்.
இதற்கு செலவுகள் 2100 சிங்கப்பூர் டாலர் வரை கேட்கப்படும். ஆனால் இதை முழுதாக கட்டப்பட தேவையில்லை. ஒவ்வொரு டாப்பிக் வகுப்புகள் எடுக்கப்படும் போதும் 300 சிங்கப்பூர் டாலர் வரை செலுத்தலாம். மீதம் இருப்பதை முடிக்கும் போது கட்டும் வழியும் கொடுக்கப்படும்.
Safety coordinatorக்கு முதலில் 1500 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளமாக கொடுக்கப்படும். போக போக சம்பள உயர்வு நன்றாக இருக்கும். இதற்கு எக்ஸாம் எழுதும் மாடலில் தான் இருக்கும். ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். முடிந்த அளவு இதில் ஃபெயில் ஆவதற்கு வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். அந்த அளவு எக்ஸாம் அதிகப்பட்சம் எளிதாகவே இருக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் excavator operator ஆக என்ன செய்யலாம்.. 2000 சிங்கப்பூர் டாலர் சம்பளமா கிடைக்குமா? இத தெரிஞ்சிக்கோங்க லைஃப் செட்டில் தான்!
இந்த கோர்ஸ் முடித்ததும் Safety officer படிக்கலாம். இவர்களுக்கு வேலை என்பது பணியிடத்தில் இருக்கும் ஊழியர்கள் சரியான பாதுகாப்பில் உடை அணிந்து வேலை செய்கிறார்களா என்பதை கவனிப்பதே. ஆபத்தான வகையில் வேலை செய்வதை தடுக்க வேண்டும்.
வேலை என்னவோ எளிதாகவே இருக்கும். ஆனால் பணியிட விபத்தில் முதல் கேள்வி supervisorஐ தொடர்ந்து coordinatorம் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர்ஸ் முடித்தவர்கள் SPass வாங்கலாம்.