சிங்கப்பூரின் தினசரி புதிய பெருந்தொற்று வழக்குகள் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 27) அன்று, இந்த தொற்று நோய் வரலாற்றில் முதல் முறையாக 5,000-ஐ தாண்டியது. சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட நண்பகல் நிலவரப்படி நேற்று ஒரே நாளில் 5,324 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது நமது சிங்கப்பூர், மேலும் 10 பேர் வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் 54 மற்றும் 96 வயதுடையவர்கள், தடுப்பூசி போடப்படாத ஒரு வழக்கு தவிர மற்ற அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன. இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த கொடிய பெருந்தொற்று நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை செவ்வாய்கிழமை பதிவான தினசரி எண்ணிக்கையான 3,277 இலிருந்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை பதிவான வழக்குகளில், 5,312 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவியுள்ளது, இதில் சமூகத்தில் 4,651 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் 661 உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அனைத்து சமூக வழக்குகளில் அனுமதிக்கப்பட்ட, 20,895 நோயாளிகள் அல்லது 74.3 சதவீதம் பேர் வீட்டில் குணமடைந்து வருகின்றனர். மேலும் 4,589 பேர் சமூக பராமரிப்பு வசதிகளிலும், 849 பேர் பெருந்தொற்று சிகிச்சை வசதிகளிலும் உள்ளனர்.
மீதமுள்ள 1,777 நோயாளிகள் மருத்துவமனையில் வஉள்ளனர். இதில் 308 நோயாளிகளுக்கு பொது வார்டுகளில் ஆக்சிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது. ICU-ல், 76 வழக்குகள் நிலையற்றவை மற்றும் மேலும் மோசமடைவதைத் தடுக்க நெருக்கமான கண்காணிப்பில் உள்ளனர், மேலும் 66 பேர் மோசமாக நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.