TamilSaaga

“குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் முன்னேற்றம்” – புதிய திட்டங்களை முன்னெடுக்கும் சிங்கப்பூர்

நேற்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களின் நலன் காத்திட “2019ம் ஆண்டு நிலவரப்படி படிப்படியான சம்பள உயர்வு முறை அமலாக்கப்பட்டதைத்தொடர்ந்து துப்புரவு, பாதுகாப்பு, நிலசீரமைப்பு துறைகளில், உள்ள முழுநேர ஊழியர்களின் மொத்த மாதச்சம்பளம் முறையே 37, 29 மற்றும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் அவர்களின் வேலை நலன் குறித்த கூறுகையில் “2007ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 9,30,000 ஊழியர்கள் கிட்டத்தட்ட 7.8 பில்லியன் ரொக்கம் மற்றும் மத்திய சேமநிதி நிரப்புவது தொகையுடன் பயன் அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது”

திறன் ஆதரவு குறித்து வெளியிட்ட அறிக்கையில் “2010 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையில் சுமார் 3 லட்சம் ஊழியர்களுக்கும் 13 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களும் 600 மில்லியன் WSS வழங்கு தொகைகள்லுடன் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலை பிரிவில் ஊழியர்களின் பணியை மதித்து அவர்களை பாராட்டி ஊக்கம் அளிக்கவும் அவர்களுக்கு உகந்த வேலை சூழலை அமைத்து தரப்படுவதை உறுதி செய்யவும் கூடுதல் முயற்சிகள் தற்போது சிங்கப்பூர் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வேலை உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை நியமன உரிமைகள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட 42 ஆயிரத்திற்கும் மேலான சோதனைகளில் மூலம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

Related posts