TamilSaaga

“சிங்கப்பூர் Temasek அறக்கட்டளை” : முகமூடிகளை சட்டவிரோதமாக பெற்ற நபருக்கு சிறை – அப்படி என்ன செய்தார்?

மலேசியாவில் தற்போது உள்ள நிலைமை குறித்து கவலை கொண்ட ஒரு நபர், தனது பாரம்பரிய சீன மருத்துவ நோயாளிகளின் தகவல்களையும் தனது வீட்டு உரிமையாளரின் பதிவுகளை ரகசியமாக அணுகி, டெமாசெக் அறக்கட்டளையிலிருந்து முகமூடிகளை பெற அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. மலேசிய நாட்டவரும் சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்பாளருமான லீ சீ ஹார்ங் (வயது 42), ஒரு மோசடி குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 28) நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு ஒரு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி லீ தனது வீட்டு உரிமையாளருடன் வசித்துவந்துள்ளார். அவர் பாரம்பரிய சீன மருத்துவ முறையான TCMஐ செய்துவந்துள்ளார். மற்றும் அவரது குடியிருப்பில் அவரிடம் வரும் நோயாளிகளின் பதிவுகளை வைத்திருந்தார் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில், டெமாசெக் அறக்கட்டளை தனது நான்காவது நாடு தழுவிய இலவச முகமூடிகளை விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

லீ, அவரது வீட்டு உரிமையாளர் நோயாளிகளின் NRIC மற்றும் FIN எண்கள் உட்பட, நோயாளிகளின் பதிவுகளை அவர்களது குடியிருப்பின் ஸ்டோர்ரூமில் வைத்திருப்பதை லீ கண்டுபிடித்தார். இதனையடுத்து ஐந்து நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக நகலெடுத்து வைத்திருந்தார். அவர் பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் சொந்தமான தனிப்பட்ட தகவல்களைக் அளித்து 60 வெள்ளி மதிப்புள்ள ஆறு Livinguard முகமூடிகளை பெற்றுள்ளார். மேலும் அவர் நான்கு முகமூடிகளை மலேசியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த முகமூடிகளை பெறவிரும்பின உண்மையான அடையாள அட்டை கொண்ட நபர்கள் அணுகியபோது அவர்கள் ஏற்கனவே முகமூடிகள் பெற்று விட்டார்கள் என்று கூறியதும் அவர்கள் போலீசாரை அணுகிய நிலையில் லீ-யின் குற்றம் அம்பலமாகியுள்ளது.

Related posts