சிங்கப்பூர்: Progress Singapore Party (PSP) முக்கியப் பிரமுகரும் அதன் தகவல் தொடர்புக் குழுவுக்குத் தலைமை தாங்கி கடந்த தேர்தலில் போட்டியிட்டவருமான குமரன் பிள்ளை அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறார்.
முன்னாள் பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி எம்.பி.யான டான் செங் பாக்கால் மூன்றாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட எதிர்க்கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் இருந்து சமீப காலங்களில் மிக முக்கிய தலைவர் வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.
51 வயதான திரு குமரன் பிள்ளை, புதன்கிழமை (பிப். 16) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசுகையில், “தகவல் தொடர்புத் தலைவர் மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை கட்சியின் தலைவர் Francis Yuen-க்கு திங்களன்று கூறினேன்” என்று தெரிவித்தார்.
குமரன் பிள்ளை கடந்த 2020 பொதுத் தேர்தலில் Kebun Baru தனித் தொகுதிக்கு வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய செயற்குழுவில் (CEC) இருந்து “வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக” கூறினார்.
இதுகுறித்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திரு Yuen-வைத் தொடர்பு கொண்டபோது, குமரன் பிள்ளை CEC யில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறினார்.
எனினும், வியாழன் (பிப்ரவரி 17) அன்று வெளியிடப்பட்ட PSP அறிக்கையில், திரு.பிள்ளை கட்சியில் இருந்து “ஒதுங்குவது” பற்றி குறிப்பிட்டுள்ளது.
அவரது கட்சி உறுப்பினர் பதவி ஜனவரியில் காலாவதியாகிவிட்டது. அவர் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணமான 10 டாலரை இன்னும் செலுத்தவில்லை. எனினும், இதனை செலுத்த, திரு குமரன் பிள்ளைக்கு இன்னும் ஆறு மாதங்கள் வரை நேரம் உள்ளது.
தான் அரசியலை விட்டு விலகவில்லை என்றும், PSP உடன் தொடர்ந்து ஆலோசனைப் பிரிவில் ஈடுபடுவேன் என்றும் அவர் ST-யிடம் கூறினார்.
கட்சியுடன் தனக்கு எந்தவிதமான மோதலும் இல்லை என்றும், வணிகம் தொடர்பான “greener pastures” மற்றும் தனது புதிய திட்டங்களும் தான் தனது எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும் என்று குமரன் பிள்ளை கூறினார்.
குமரன் பிள்ளை அவர்கள் ஸ்டார்ட்-அப்களை உருவாக்கி நிர்வகிக்கும் ஆலோசனை நிறுவனத்தை நடத்துகிறார், மேலும் சமூக-அரசியல் வலைத்தளமான தி இன்டிபென்டன்ட் நியூஸின் வெளியீட்டாளராகவும் உள்ளார்.
திரு Yuen, எஸ்டியிடம் பேசுகையில், உடல்நலப் பிரச்சினைகள்தான் திரு பிள்ளை விடுப்பு எடுத்ததற்கு முதன்மைக் காரணம் என்று கூறினார்.
“பெரிய சிக்கல் என்று எதுவும் இல்லை, ஆனால் அவரை கொஞ்சம் இலகுவாக விட வேண்டும்” என்று கட்சியின் செயலாளர் நாயகம் கூறினார்.