சிங்கப்பூரில் சுமார் ஓர் ஆண்டு நடைபெற்ற மறு சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் தற்போது சீலாட் ரோட்டில் உள்ள சீக்கிய கோவில் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த கோவில் திறப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
நன்கொடை மூலம் திரட்டப்பட்ட சுமார் 2.5 மில்லியன் தொகையை கொண்டு அந்த சீக்கிய கோவிலில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த கோவிலில் வழிபாடு கூடம் மற்றும் சமையலறையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மின்விளக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, முதியவர்களுக்கு வசதியாக கூடுதல் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சீக்கிய கோவிலில் அன்னதானம் அளிக்கும் ‘லங்கார்’ முறையின் கீழ் தினமும் சுமார் 1500 பேருக்கு உணவு வழங்க வசதி இருந்தது.
இந்நிலையில் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் தற்போது 2000 பேருக்கு ஒரே சமயத்தில் உணவு வழங்கும் ஆற்றலை அந்த கோவில் பெற்றுள்ளது
திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், வழிபாட்டுத்தலங்கள் கிருமி பலரால் காரணமாக பல தடங்கல்களை சந்தித்து வருகின்றன என்று கூறினார். “பக்தர்களுக்கு இது சோதனை மிகுந்த காலம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிக்கிய கோவிலில் மட்டுமல்லாமல் பல்வேறு வழிபாட்டு தலங்களும் கிருமித்தொற்றை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த சிரமமான காலகட்டத்தில் சீக்கிய கோவில்கள் நன்கொடை திரட்டுவது, மளிகை பொருட்களை வழங்குவது போன்ற பல நற்செயலாகை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.