TamilSaaga

வீட்டு வாசலில் வெள்ளைக்கொடி : தேடிச்சென்று உதவும் சமூக ஆர்வலர்கள் – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

மலேசியாவில் பெட்டாலிங் ஜெயா மாகாணத்தில் ஒரு வீட்டின் வாசலில் அதனுடைய உரிமையாளர் ஜம்புநாதன் கனகசபை என்பவர் வெள்ளைக்கொடி ஒன்றை பறக்க விட்டுள்ளார். 64 வயதான ஜம்புநாதன் நகை கடையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகின்றார்.

மாத சம்பளமாக கனகசபை 312 டாலர்கள் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவசர தேவைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதாக உள்ளூர் நிறுவனமொன்று கூறியிருந்தது. அதைத்தொடர்ந்து கனகசபை வீட்டின் வாசலில் வைத்த வெள்ளைக்கொடி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அப்பகுதி குழுத் தலைவர், கனகசபையை அணுகி பணம் கொடுக்க முன்வந்தபோது ஜம்புநாதன் கனகசபை அதை மறுத்து தனக்கு உணவு மட்டும் போதும் என்று குறிப்பிட்டதாக CNAவிடம் ஜம்புநாதனின் மகள் இந்திராணி தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் பிள்ளைகளுக்கும் சரியான வருமானம் இல்லாத நிலையில் ஜம்புநாதனை போல பலர் சரியான உணவு கூட இல்லாமல் வாடி வருகின்றனர். இந்நிலையில் வீட்டு வாசல்களில் வெள்ளைக்கொடி உள்ள வீடுகளைத் தேடி பல சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று தங்களுடைய உதவிகளை வழங்கி வருவது பெரும் வரவேற்ப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபல CNA செய்தி நிறுவனம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது

Related posts