TamilSaaga

அமெரிக்க சிறையில் Amos Yee : விரைவில் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட வாய்ப்பு – செய்த குற்றங்கள் என்ன?

அமெரிக்காவில் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்ட சிங்கப்பூர் அமோஸ் யீயின் சிறப்பு வழக்கறிஞருக்கும் மற்றொரு வழக்கறிஞருக்கும் இடையே பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகின்றது. சிங்கப்பூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை (அக்டோபர் 21) chicago நீதிமன்றத்தில் “ஜூம்” கால் வழியாக அந்த நபர் ஆஜரானார். 22 வயதான அவர் மீது தற்போது 18 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடம் அநாகரீகமாக நடத்தல், சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்கள் வைத்திருந்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இதில் அடக்கம்.

சுமார் ஒரு வருடமாக ரிமாண்டில் இருந்த யீ, அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்திற்கு வர உள்ளார். யீக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தஞ்சம் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவர் Chicago-வின் நோர்வுட் பார்க் கிழக்கு பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டார். அவர் 14 வயது சிறுமியுடன் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் ஜூன் 30 வரை 2019-ல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கான உரையாடல்களை உள்ளடக்கியது. இந்நிலையில் அவர்களது உறவு கசந்த நிலையில் அவர்களுடைய உறவு முறிந்துள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறியுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், யீ தனது புகலிட நிலையை இழந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படலாம். இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், யீ தனது புகலிட நிலையை இழந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படலாம்.

கடந்த 2015ம் ஆண்டில், கிறிஸ்தவர்களைப் பற்றி கருத்து தெரிவித்ததன் மூலம் மத உணர்வுகளை காயப்படுத்தியதற்காக யீ சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் கழித்து, யீ மீண்டும் இதே போன்ற குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டார், அப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் பற்றி கருத்து தெரிவித்ததற்காக கூறப்படுகிறது.

Related posts