சிங்கப்பூரில் நடைபெறும் TOTO Drawவில் வாரம் இரு பல அதிர்ஷ்டசாலிகள் தங்கள் அதிர்ஷ்ட தேவதையை கண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற Drawவில், ஜாக்பாட் பரிசாக S$1,000,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த ஜாக்பாட் பரிசான S$1,000,000 மற்றும் குரூப் 2 பரிசுகள் யாராலும் வெல்லப்படவில்லை என்பதால் அந்த பரிசு தொகை கடந்த 21ம் தேதி ஜூலை அன்று நடந்த toto draw போட்டியில் இணைக்கப்பட்டது.
இறுதியில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற drawவில் இரண்டு அதிர்ஷ்டசாலிகள் S$2,835,750 தொகையை பிரித்துக்கொண்டனர். மேலும் இரண்டாம் பரிசான S$59,7000 தொகையும் இருவரால் பிரித்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை திங்கள்கிழமை அடுத்த toto draw நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இந்த முறையும் S$10,00,000 குரூப் 1 பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்கள் நாளை மாலை வரை விற்பனை செய்யப்படும்.
விற்பனை முடிந்து நாளை ஜூலை 25ம் தேதி மாலை 6 மணிக்கு பொதுமக்கள் முன்னிலையில் இந்த toto drawவிற்கான குலுக்கல் நடைபெறும்.