சிங்கப்பூரில் 16 முதல் 65 வயதுக்குட்பட்ட முப்பத்தைந்து ஆண்களும் நான்கு பெண்களும், சிங்கப்பூர் இருநூறாண்டு நினைவுக் குறிப்புகளை உள்ளடக்கிய வேலை மோசடிகள் மற்றும் ஃபிஷிங் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 28) சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேலைவாய்ப்பு முகவர்கள் மீது கடும் நடவடிக்கை
கடந்த நவம்பர் 22 முதல் 26 வரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு, மொத்தம் 113 நபர்கள் 900-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு மோசடிகள் மற்றும் ஃபிஷிங் மோசடிகளில் ஈடுபட்டு சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகளுக்கு வழிவகுத்தனர் என்றும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக மேலும் 72 பேர் குறித்த விசாரணை நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை விற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது, அல்லது தங்கள் சிங்பாஸ் சான்றிதழ்களை மோசடி கும்பல்களிடன் விட்டுக்கொடுத்ததாக காவல்துறை கூறியது. மேலும் விற்கப்பட்ட ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் 5,000 வெள்ளி அல்லது விற்கப்படும் ஒவ்வொரு Singpass நற்சான்றிதழ்களுக்கும் 400 வெள்ளி தருவோம் என்று மோசடி கும்பல்களால் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் வாக்குறுதியளிக்கப்பட்ட கட்டணத்தைப் பெறவில்லை.
சிலர் தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடி செய்பவர்களுக்கு வாடகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது அல்லது வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் பணம் எடுப்பதில் அவர்களுக்கு உதவியது கண்டறியப்பட்டது. “வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி மற்றும் ஒப்பீட்டளவில் எளிதான வேலை பொறுப்புகளுக்கு, நியாயமற்ற அதிக சம்பளம் ஆகியவற்றை உறுதியளிக்கும் வேலை விளம்பரங்கள் குறித்து வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.